Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

உங்களுடைய வயது என்ன?

 உங்களுடைய வயது என்ன?

30 பங்குனி 2023 வியாழன் 11:37| பார்வைகள் : 12108


சித்ரண்ணாவின் நீண்ட கால நண்பர் ஒருவர் இவரை நலம் விசாரித்தார், எப்படி இருக்கிறீர்கள் சித்ரண்ணா? என்று கேட்டார். 
 
சித்ரண்ணாவும் நலமாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டார். சித்ரண்ணா! என்ன வாழ்க்கை இது? ஓடிக் கொண்டே இருக்கிறது.ஓய்வே இல்லண்ணா என்று கூறினார் நண்பர். அதற்கு சித்ரண்ணா, ஓடினால் தான் வாழ்க்கை என்று கூறினார். 
 
நீங்கள் கூறுவதும் சரிதான்  உட்கார்ந்து விட்டால் என்ன இருக்கிறது ஓடித்தான் ஆகவேண்டும்.
 
சரி சித்ரண்ணா உங்களுடைய வயது என்ன? என்னுடைய வயது 30 என்றார் சித்ரண்ணா. அதற்கு அவருடைய நண்பர் நான் பத்து வருடங்களுக்கு முன்பு கேட்ட போதும இதே தானே சொன்னீர்கள்! ஆமாம் என்றார் சித்ரண்ணா. 
 
நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு கேட்ட போதும் இதை தானே சொன்னீர்கள்?இதற்கும் ஆமாம் என்றார். 
 
நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு கேட்ட போதும் கூட 30 வயது என்று தானே சொன்னீர்கள்! அட இரண்டு வருடங்கள் கழித்தும் கேட்கிறேன், இப்பொழுதும் அதே 30 வயதுதான் என்கிறீர்கள் என்ன சித்ரண்ணா என்னிடமே பொய் கூறுகிறீர்களா?
 
அட என்னப்பா நானா பொய் கூறுகிறேன்? நான் அன்று சொன்னதையே தான் இன்றும் சொல்கிறேன் அன்றும் முப்பது வயதுதான் இன்றும் முப்பது வயதுதான். எதையாவது மாற்றி கூறினேனா? நான் சொன்ன சொல் மாறாதவன் அல்லவா? அதனால்தான் 30 வயது என்கிறேன். இதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லையே என்று கூறினார்.
 
இதைக் கேட்ட நண்பரால் சிரிப்பை அடக்க முடியவில்லை சித்ரண்ணா உங்கள் நகைச்சுவைக்கு அளவே இல்லையா?
 
 
ஆமாப்பா நாட்டிலுளள பெரிய மனுஷங்க எல்லாரும் நான் சொன்ன சொல் மாறாதவர் சொன்ன சொல் மாறாதவன் என்கிறார்கள்! நானும் தான் சொன்ன சொல் மாறாதவன் அதை தான் இப்போ நான் சொன்னேன். இதுல என்ன இருக்கு
 

எழுத்துரு விளம்பரங்கள்