Paristamil Navigation Paristamil user login Paristamil advert login
கீர்த்தி - அனிருத் திருமணமா?

கீர்த்தி - அனிருத் திருமணமா?

 கீர்த்தி - அனிருத் திருமணமா?

18 புரட்டாசி 2023 திங்கள் 15:23| பார்வைகள் : 560


நடிகை கீர்த்தி சுரேஷ் மீது சில வதந்திகள் அவ்வப்போது கிளம்பி வரும் நிலையில் தற்போது அனிருத்தை அவர் திருமணம் செய்யப் போவதாக பரபரப்பு வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து கீர்த்தி சுரேஷ் தந்தை சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் துபாய் தொழில் அதிபரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய போவதாக வதந்திகள் பரவியது. அதனை அடுத்து கீர்த்தி சுரேஷ் அவர் தனது நெருங்கிய நண்பர் என்றும் அவருடன் திருமணம் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் திருமணம் செய்ய போவதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் தந்தையும், தயாரிப்பாளருமான சுரேஷ் ’இந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானது, தயவுசெய்து ஆதாரம் இல்லாத தகவல்களை பரப்ப வேண்டாம். கீர்த்தியின் திருமணம் குறித்த அறிவிப்பை முறையாக நானே வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.இதனை அடுத்து அனிருத் - கீர்த்தி திருமணம் முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதியாகி உள்ளது.