Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

நாய்களை அலங்கரித்து வழிபாடும் விநோதம்

 நாய்களை அலங்கரித்து வழிபாடும்  விநோதம்

19 கார்த்திகை 2023 ஞாயிறு 11:37| பார்வைகள் : 364


விலங்குகளில், மனிதர்களின் சிறந்த நண்பர்களாக நாய்கள் உள்ளன. அவற்றிற்காக ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் பூஜைகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவது ஆச்சரியம் ஏற்படுத்துகிறது.

மேற்கு வங்காளத்தில் சிலிகுரி நகரிலேயே இந்த விநோத திருவிழா நடத்தப்படுகிறது. இதன்படி, குகுர் திகார் அல்லது குகுர் பூஜை என்ற பெயரில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

இதில், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வளர்ப்பு நாய்கள் என்றில்லாமல் தெரு நாய்களையும் காலையிலேயே குளிக்க வைத்து, அவற்றை அலங்கரித்து, சிறப்பாக சமைக்கப்பட்ட நிறைய உணவுகளையும் வழங்கினர்.

தீபாவளி பண்டிகையையொட்டி இந்த திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இதுபற்றி விலங்குகளுக்கான உதவி மையத்தின் உறுப்பினரான பிரியா ராய் கூறும்போது,

அதிக உற்சாகத்துடன் குகுர் திகார் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கடவுளை போன்று தெரு நாய்களை நாங்கள் வழிபட்டோம்.

தெரு நாய்களுக்கு மதிப்பளித்து, உங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் அவற்றுக்கு உணவளிக்க வேண்டும் என வேண்டுகோளாக நான் கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.