Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

பறக்கும் ரயிலை தமிழக அரசிடம் ஒப்படைக்க முடிவு

 பறக்கும் ரயிலை தமிழக அரசிடம் ஒப்படைக்க முடிவு

1 ஐப்பசி 2023 ஞாயிறு 10:09| பார்வைகள் : 994


சென்னை கடற்கரை வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் வழித்தடத்தை தமிழக அரசிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

மேலும் அவர், தமிழக அரசு தற்போது வணிக திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது. தமிழக அரசு எப்போது கேட்கிறதோ, அப்போது பறக்கும் ரயில் வழித்தடம் முழுமையாக ஒப்படைக்கப்படும் எனக் கூறினார்.