Paristamil Navigation Paristamil user login Paristamil advert login
15 ஆம் இலக்க மெத்ரோவின் சிறப்பு என்ன.?

15 ஆம் இலக்க மெத்ரோவின் சிறப்பு என்ன.?

15 ஆம் இலக்க மெத்ரோவின் சிறப்பு என்ன.?

1 புரட்டாசி 2023 வெள்ளி 11:26| பார்வைகள் : 277


பரிஸ் நகரின் எல்லைகள் விரிவாக்கப்பட்டு ‘Grand Paris’ எனும் பெயரோடு புதுப்பொலிவுபெற்று வருவதை நீங்கள் அறிவீர்கள். இதன் ஒரு கட்டமாக புதிய மெத்ரோ நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் 15 ஆம் இலக்க மெத்ரோ முக்கியமானது. அகன்ற பரிஸ் நகரை ஒரு சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் வண்ணம் இது அமைக்கப்பட்டு வருகிறது.

மொத்தமாக 36 நிலையங்கள் இதில் அமைக்கப்படுகின்றன. முதல்கட்டமாக தெற்குப் பகுதி நிலையங்கள் 2025 ஆம் ஆண்டும், ஏனைய நிலையங்கள் 2030 ஆம் ஆண்டும் திறக்கப்படவுள்ளன.

சாரதி இல்லாத, முழுக்க முழுக்க தானியங்கி முறையில் இதன் சேவைகள் இடம்பெறும். மெத்ரோ சேவைகளை ‘துரித போக்குவரத்து அமைப்பு’ என்று குறிப்பிடுவார்கள். 15 ஆம் இலக்க மெத்ரோ திறக்கப்பட்டால், அதுவே உலகில் மிக நீளமான நிலத்தடி துரித போக்குவரத்தாக இருக்குமாம். இதன் மொத்த பயண தூரம் 75 கிலோ மீட்டர்கள்.

தரப்பட்டிருக்கும் படத்தைப் பாருங்கள். Noisy-Champs இல் பயணத்தை ஆரம்பித்தால், Créteil சென்று அங்கிருந்து Nanterre எல்லாம்
சுற்றி வந்து, பின்னர் Bobigny, Bondy வழியாக வந்து கடைசியில் ஆரம்பித்த இடத்துக்கே வந்துசேர முடியும்.

மெத்ரோ சேவைக்கு வந்தபின்னர் பரிசின் போக்குவரத்து இன்னும் இலகுவாகும் என்பதில் ஐயமில்லை.! 

எழுத்துரு விளம்பரங்கள்