Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

PSG அணியை கைப்பற்றிய இருவர்....

PSG அணியை கைப்பற்றிய இருவர்....

25 புரட்டாசி 2023 திங்கள் 08:42| பார்வைகள் : 1055


லீக் 1 தொடரில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 4-0 என்ற கோல் கணக்கில் மார்செய்லே அணியை வீழ்த்தியது.

Parc des Princes மைதானத்தில் நடந்த போட்டியில் PSG மற்றும் Marseille அணிகள் மோதின. 

ஆக்ரோஷமாக ஆட்டத்தை தொடங்கிய PSG அணிக்கு 8 வது நிமிடத்தில் பிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. 

அச்ராஃப் ஹக்கிமி ஒரே ஷாட்டில் கோல் அடித்து மிரட்டினார்.  

அதனைத் தொடர்ந்து PSG-யின் ராண்டல் கோலோ, 37வது நிமிடத்தில் ஹக்கிமி அடித்த ஷாட் கோல் போஸ்டில் பட்டு திரும்பி வந்தபோது துரிதமாக செயல்பட்டு கோலாக மாற்றினார். 

பின்னர் ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்த ராமோஸ், 89 வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். 

கடைசி வரை மார்செய்லே அணியால் கோல் அடிக்க முடியாததால் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் 4-0 என மிரட்டல் வெற்றி பெற்றது. 

எழுத்துரு விளம்பரங்கள்