Paristamil Navigation Paristamil advert login

தங்க அறுவடை செய்யும் பிரெஞ்சு வீரர் Léon Marchand..!

தங்க அறுவடை செய்யும் பிரெஞ்சு வீரர் Léon Marchand..!

1 ஆவணி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 2509


நேற்று ஜூலை 31 ஆம் திகதி ஒரே நாளில் இரண்டு தங்கப்பதங்களை பிரான்ஸ் பெற்றுக்கொண்டது.

இரண்டுமே நீச்சல் போட்டிகளுக்காக தனிநபர் ஒருவராக Léon Marchand இந்த பதக்கங்களை பெற்றுள்ளார். ஆடவருக்கான 200 மீற்றர் breaststroke ரக நீச்சலும், ஆடவருக்கான 200 மீற்றர் butterfly நீச்சலும் என இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்த இரட்டை தங்கங்களை பெற்றுள்ளார்.

இந்த இரட்டை தங்கங்களுடன் பிரான்ஸ் மொத்தமாக 8 தங்கங்களை பெற்றுள்ளது. 10 வெள்ளி, 8 வெண்கலத்துடன் மொத்தமாக 26 பதக்கங்களை பிரான்ஸ் நேற்றைய நாள் முடிவில் பெற்றுள்ளது.

Léon Marchand இந்த பரிஸ் ஒலிம்பிக்கில் பெற்றுக்கொள்ளும் மூன்றாவது தங்கம் இதுவாகும். முன்னதாக ஆடவருக்கான 400 மீற்றர் தனிநபர் நீச்சலில் தங்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.நன்றி : RMC

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்