1,435 அடி உயர கட்டிடத்தின் உச்சியில் ஏறி இளைஞர் சாகசம்....
1 ஆவணி 2024 வியாழன் 12:05 | பார்வைகள் : 466
நியூயார்க்கில் இளைஞர் ஒருவர் 1,435 உயரமான கட்டிடத்தின் உச்சியில் ஏறி வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
Livejn Anno எனும் இளைஞர் நியூயார்க் நகரில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் ஏறி இந்த சாதனையை நிகழ்த்தினார்.
கட்டிடத்தின் முனையில் பொருத்தப்பட்டிருந்த ஆண்டெனா மீது ஏறி பிடிப்பு இல்லாமல் வீடியோ பதிவு செய்தார்.
எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரம் 1,435 அடி ஆகும். அந்த உயரத்தில், ஒரு கையை பக்கவாட்டில் நீட்டிக்கொண்டு, மற்றொரு கையில் செல்ஃபி ஸ்டிக்கை பிடித்துக்கொண்டு இந்த ஸ்டண்ட்டை செய்துள்ளார்.
இந்த வீடியோ livejn Anno இன் Instagram கணக்கில் பகிரப்பட்டது.
பைத்தியக்காரத்தனமான சாகசத்தின் வீடியோவை 49 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
அவரது சாகசத்தை பலர் பாராட்டினாலும், சிலர் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சாகசத்தை அனுமதித்தது யார்? என்று சிலர் கேட்டுள்ளனர்.
இந்த காணொளியை பார்த்த பலரும் அவர் பத்திரமாக கீழே இறங்கினாரா என கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்வளவு உயரத்தில் வீசும் காற்றில் கூட எப்படி கைகளை குனிந்து நிற்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுபோன்ற ஸ்டண்ட் வீடியோக்களை உருவாக்காதீர்கள். உங்களுக்கு அது பழகியிருக்கலாம். ஆனால் வீடியோவைப் பார்க்கும் நாங்கள் அதிர்ச்சியிலிருந்து மீள சிறிது காலம் ஆகும் என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே இதுபோன்ற ஆபத்தான வீடியோவை அனுமதிக்கக் கூடாது என்ற விவாதம் தொடங்கியுள்ளது. இந்த முறை பத்திரமாக தரையிறங்கியிருக்கலாம். ஆனால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டால், அது ஆபத்து என்று கூறியுள்ளனர்.
எனவே, கட்டடம் மற்றும் கோபுரத்தின் மீது ஏற அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது. இந்த வீடியோவை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.