வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா பவுலிங் தேர்வு - நிதிஷ், மயங்க் யாதவ் அறிமுகம்
6 ஐப்பசி 2024 ஞாயிறு 14:46 | பார்வைகள் : 1178
வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2 - 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றதை தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
முதல் டி20 ஆட்டம் மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியின் ஓபனிங் பேட்டர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் களமிறங்கவுள்ளார்கள்.
இப்போட்டியின் மூலம் நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகின்றனர்.