அடுத்த Google CEO-க்கு சிறப்பான AI துணை இருப்பார்- சுந்தர் பிச்சை

9 ஆனி 2025 திங்கள் 10:08 | பார்வைகள் : 2973
அடுத்த Google CEO-க்கு ஒரு அறிவாற்றலான AI துணை இருப்பார் என Alphabet CEO சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
ஜூன் 7-ஆம் திகதி சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற Bloomberg Tech மாநாட்டில் பேசிய சுந்தர் பிச்சை, எதிர்கால நிறுவன மேலாண்மையில் AI கூட்டாளிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என கூறினார்.
வேலைகளை எளிதாக்கும் Replit, Cursor போன்ற AI கருவிகளை தற்போது பயன்படுத்தி வருவதாகவும், அதனுடைய விளைவாக எளிய தூண்டுதல்கள் மூலம் தனிப்பயன் வலைப்பக்கங்களை சிரமமின்றி உருவாக்க மிகச் சிறந்த திறன் கொண்ட AI உதவியாளர் இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
“AI என்பது மனிதர்களை மாற்றும் கருவி அல்ல. இது மனிதர்களுக்கான சக்திவாய்ந்த துணை,” என அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், Alphabet நிறுவனம், AI வளர்ச்சிக்கு இடையே கூட மனித பணியாளர்களை, குறிப்பாக பொறியியல் துறையில், அதிகளவில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது என்றார்.
AGI (Artificial General Intelligence) குறித்து பேசும் போது, தற்போதைய AI மொடல்கள் சில அடிப்படை தவறுகளைச் செய்கின்றன என்பதாலும், முழுமையான AGI நோக்கி நாம்செல்கிறோம் என்று நிச்சயமாக கூற முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
இந்தக் கருத்துகள், AI மற்றும் மனிதர்கள் இடையிலான கூட்டாண்மையின் புதிய பரிமாணத்தை காட்டுகின்றன.