Paristamil Navigation Paristamil advert login

ஆர்.எஸ்.எஸ்., சேவைகளை ஸ்டாலின் அறிய வேண்டும் : மத்திய அமைச்சர் முருகன்

ஆர்.எஸ்.எஸ்., சேவைகளை ஸ்டாலின் அறிய வேண்டும் : மத்திய அமைச்சர் முருகன்

3 ஐப்பசி 2025 வெள்ளி 15:37 | பார்வைகள் : 733


ஆர்.எஸ்.எஸ்., சேவைகள் பற்றி ஸ்டாலின் அறிய வேண்டும் மத்திய அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்

அமைச்சர் முருகன் மேலும் கூறியதாவது, ‛ அதன் பங்களிப்பு என்ன; இந்த தேசத்தை கட்டமைக்க என்னென்ன தியாகம் செய்திருக்கிறது; நாட்டின் வளர்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., பங்கு என்ன என்பதை, ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும். நான் வேண்டுமானாலும், அவருக்கு ஒரு புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன். அவர் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

த.வெ.க., தலைவர் விஜய், மிகப்பெரிய பேரிடரில் இருக்கிறார். இந்த நேரத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் பிரதமர் மோடியை விமர்சித்து பேசுகிறார். ராகுல் நல்ல தலைவர் இல்லை'.

இவ்வாறு அவர் கூறினார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்