Paristamil Navigation Paristamil advert login

ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணையும் படத்தின் இயக்குனர் யார்?

ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணையும் படத்தின் இயக்குனர் யார்?

18 புரட்டாசி 2025 வியாழன் 16:48 | பார்வைகள் : 171


நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து நடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ரெட்ஜன்ட் மூவிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்க உள்ளன.

தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒரே படத்தில் நடிக்கவிருக்கும் தகவல் கடந்த சில நாட்களாக சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து பேட்டி அளித்து இருந்த நடிகர் ரஜினிகாந்த் கதை மற்றும் இயக்குனர் முடிவு செய்யப்படவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் கமலஹாசன் இணையும் படத்தின் இயக்குனர் யார் என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. சில ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் இரு நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளதால் அவரே இயக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.

இன்னும் சிலர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை சிறப்பாக கையாளுவதற்கு இயக்குனர் ஷங்கர்தான் சரியான நபராக இருப்பார் என்று கூறியுள்ளார்கள்.இன்னும் சில ரசிகர்கள் எச் வினோத் என்றும், மேலும் சிலர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்கள்.இதேபோன்று அட்லி ரஜினி - கமல் படத்தை இயக்கலாம் என்றும் இன்னும் சில ரசிகர்கள் நெல்சன் திலீப் குமார் இயக்கலாம் என்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்