Paristamil Navigation Paristamil advert login

கல்கியிலிருந்து தீபிகா நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

கல்கியிலிருந்து தீபிகா நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

18 புரட்டாசி 2025 வியாழன் 16:48 | பார்வைகள் : 168


இந்திய சினிமாவில் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்த படமான கல்கி 2898 ஏடி படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டுள்ளார்.தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் கல்கி 2898 ஏடி. மகாபாரத குருச்சேத்திர போரையும், அதற்கு பிறகு 6 ஆயிரம் ஆண்டுகள் கழித்து நடக்கும் கல்கியின் வருகையையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் பெரும் ஹிட் அடித்து 1100 கோடி வசூலித்தது.

இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. இதில் கமல்ஹாசனின் சுப்ரீம் யாஷ்கின் என்ற வில்லன் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் கல்கி அவதாரத்தை தாங்கும் கன்னி தாயாக நடித்த தீபிகா படுகோன் இரண்டாம் பாகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம், ”Kalki 2898 AD படத்தின் வரவிருக்கும் தொடர்ச்சியில் தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்.

கவனமாக பரிசீலித்த பிறகு, நாங்கள் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். முதல் படத்தை உருவாக்கும் நீண்ட பயணம் இருந்தபோதிலும், எங்களால் ஒரு கூட்டணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

Kalki 2898 AD போன்ற ஒரு படம் அந்த அர்ப்பணிப்புக்கும் இன்னும் பலவற்றிற்கும் தகுதியானது. அவரது எதிர்காலப் பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” என தெரிவித்துள்ளனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்