Paristamil Navigation Paristamil advert login

காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற சிறுவர்கள் - விபத்தில் பலி!!

காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற சிறுவர்கள் - விபத்தில் பலி!!

12 கார்த்திகை 2025 புதன் 07:00 | பார்வைகள் : 528


காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறிவுறுத்தலையும் மீறி அதிவேகமாக ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த இரு சிறுவர்களில் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் நேற்று நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளில் Tourcoing நகரில் இடம்பெற்றது.  இரு சிறுவர்கள்  நேற்று மாலை 7 மணி அளவில், ஸ்கூட்டர் ஒன்றில் வேகமாக பயணித்த நிலையில், Lille நகரசபை காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர்.

ஆனால் கட்டுப்பாட்டை மீறி குறித்த இருவரும் மேலும் வேகமாக பயணித்து, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகினர். இதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 16 வயதுடைய ஸ்கூட்டரை செலுத்திய சிறுவன் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இருவேறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்