Paristamil Navigation Paristamil advert login

இசையமைப்பாளருக்கு ஜோடியாகும் அதிதி சங்கர்…

இசையமைப்பாளருக்கு ஜோடியாகும் அதிதி சங்கர்…

12 கார்த்திகை 2025 புதன் 11:41 | பார்வைகள் : 151


பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர், கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் பல படங்களில் கமிட் ஆகி வரும் அதிதி சங்கர், ஒன்ஸ் மோர் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். 
 

மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் அதிதி சங்கர், பிரபல இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இவர்களது கூட்டணியிலான புதிய படத்தை ‘ஜடா’ படத்தின் இயக்குனர் குமரன் இயக்க இருப்பதாகவும் பா. ரஞ்சித் இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் அப்டேட் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘தெகிடி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிவாஸ் கே பிரசன்னா பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடைசியாக ‘பைசன்’ திரைப்படத்தில் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்