Paristamil Navigation Paristamil advert login

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை துல்கர் சல்மான் நிராகரித்தாரா?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை  துல்கர் சல்மான்  நிராகரித்தாரா?

12 கார்த்திகை 2025 புதன் 11:41 | பார்வைகள் : 151


நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா ஆகியோர் நடிக்கும்  இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

கடந்த ஆண்டு இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் ஆண்டு இறுதியில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதையடுத்து படத்தின் சென்னை, இலங்கை மற்றும் பாங்காங்க் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த படம் ஒரு கொள்ளை சம்மந்தப்பட்ட படமாக இருக்கும் என தெரிகிறது.

இந்தக் கதையை முதலில் ஜேசன் துல்கர் சல்மானிடம்தான் சொன்னாராம். கதைக் கேட்டு அவருக்குப் பிடித்த போதிலும் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதால் காத்திருக்க சொன்னாராம். ஆனால் அதற்கு 2 ஆண்டுகள் ஆகிவிடும் என்பதால் ஜேசன் சந்தீப் கிஷனிடம் சென்றதாக சொல்லப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்