Paristamil Navigation Paristamil advert login

இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் - நாணய சுழற்சிக்கு காந்தி உருவ தங்க நாணயம்

இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் - நாணய சுழற்சிக்கு காந்தி உருவ தங்க நாணயம்

12 கார்த்திகை 2025 புதன் 15:43 | பார்வைகள் : 124


இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடரில் நாணய சுழற்சிக்கு சிறப்பு நாணயம் பயன்படுத்தப்பட உள்ளது.

தென்ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையே 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 T20 போட்டி கொண்ட 'சுதந்திரக் கோப்பை' (Freedom Trophy) தொடர், இந்தியாவில் வரும் 14 ஆம் திகதி தொடங்க உள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்க உள்ள இந்த தொடரில், நாணய சுழற்சிக்கு சிறப்பு நாணயம் ஒன்றை பயன்படுத்த உள்ளனர்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் இரு தலைவர்களும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைதி, சுதந்திரம் மற்றும் அகிம்சை ஆகியவற்றின் மரபை கௌரவிக்கும் வகையில் வங்காள கிரிக்கெட் சங்கம் (CAB) இந்த நாணயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

6 ஆண்டுகளுக்கு பிறகு, ஈடன் கார்டன் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளதால், ரூ.1.4 கோடி மதிப்பிலான 96,000 டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளன.

அவுஸ்திரேலியா தொடரை முடித்து, இதில் கலந்து கொள்ள இந்திய வீரர்கள் வருகை தந்துள்ளனர். சுப்மன் கில் மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மைதானத்தை பார்வையிட்டனர்.

டெல்லி குண்டு வெடிப்புக்கு பின்னர், போட்டி நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்