Paristamil Navigation Paristamil advert login

யாழில் ஆவா குழுவின் தலைவர் வினோத் கைது

யாழில் ஆவா குழுவின் தலைவர் வினோத் கைது

12 கார்த்திகை 2025 புதன் 15:43 | பார்வைகள் : 325


ஆவாகுழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராமம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடன்  கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது சகா ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது இருவரும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்