Paristamil Navigation Paristamil advert login

நவம்பர் 13 தாக்குதல்! - மூவண்ணத்தில் ஒளிரும் ஈஃபிள்!!

நவம்பர் 13 தாக்குதல்! - மூவண்ணத்தில் ஒளிரும் ஈஃபிள்!!

12 கார்த்திகை 2025 புதன் 17:08 | பார்வைகள் : 497


நம்பவர் 13 தாக்குதலின் பத்தாவது ஆண்டின் நினைவாக ஈஃபிள் கோபுரம் மூவர்ணத்தில் ஒளிர உள்ளது.

இன்று நவம்பர் 12 புதன்கிழமை இரவும், நாளை 12, வியாழக்கிழமை இரவு ஈஃபிள் கோபுரம் சிவப்பு, நீலம், வெள்ளை வண்ணங்களில் ஒளிரவிடப்பட உள்ளது. இது பிரான்சின் ஒற்றுமையையும், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது. இதனால் ஈஃபிள் கோபுரம் மூவர்ணங்களில் ஒளிரும் எனவும் பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தெரிவித்தார்.

நவம்பர் 13, 2015 தாக்குதலில் 132 பேர் கொல்லப்பட்டும், 350 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.  இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நாளையுடன் பத்து ஆண்டுகள் நிறைவடைகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்