Paristamil Navigation Paristamil advert login

70 தொன்னுக்கும் அதிகமாக கொக்கைன் - சுங்கம் தகவல்!!

70 தொன்னுக்கும் அதிகமாக கொக்கைன் - சுங்கம் தகவல்!!

14 கார்த்திகை 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 309


2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், இதுவரையில் பிரான்சில் 70 தொன் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

l'office anti-stupéfiants (Ofast) இத்தகவலை நேற்று நவம்பர் 13, வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட அளவுகளை விடவும் இது அதிகம் எனவும், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களில் 'கொக்கைன்' போதைப்பொருள்   மட்டும் 70 தொன் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2023 ஆம் அண்டில் 23 தொன் கொக்கைனும், 2024 ஆம் ஆண்டில் 54 தொன் கொக்கைனும்  பறிமுதல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 70 தொன்னாக உயர்வடைந்துள்ளது.

உலகம் மூவதும் கொக்கைன் உற்பத்தி ஆண்டுக்கு 4,000 தொன்களாக அதிகரித்துள்ளது. பிரான்சுக்கு பெருமளவான கொக்கைன் Colombia, Peru மற்றும் Bolivia போன்ற நாடுகளில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்