Paristamil Navigation Paristamil advert login

உலகக்கோப்பையில் விளையாட ரொனால்டோவிற்கு தடை? - 22 வருடத்தில் முதல் தலைகுனிவு

உலகக்கோப்பையில் விளையாட ரொனால்டோவிற்கு தடை? - 22 வருடத்தில் முதல் தலைகுனிவு

14 கார்த்திகை 2025 வெள்ளி 10:59 | பார்வைகள் : 120


2026 பிபா கால்பந்து உலக கோப்பையில் ரொனால்டோவிற்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற 2026 பிபா கால்பந்து உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியில், போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய போட்டி டப்லினில் நடைபெற்றது.

இதில், 2-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது, அயர்லாந்து வீரர் டாரா ஓஷியாவை முழங்கையால் தள்ளி ஃபவுல் செய்ததற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

தனது 22 வருட கால்பந்து வாழ்க்கையில், ரொனால்டோவிற்கு முதல்முறையாக ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது.

இது வன்முறை என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதால், ரொனால்டோவிற்கு 3 போட்டிகள் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அர்மேனியாவிற்கு எதிரான போட்டியிலும், உலகக் கோப்பையில் முதல் 2 போட்டிகளிலும் ரொனால்டோ தடை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்