தென்கொரிவின் முன்னாள் பிரதமர் வாங்க் ஹொ யன் கைது
14 கார்த்திகை 2025 வெள்ளி 11:59 | பார்வைகள் : 164
தென்கொரிய முன்னாள் பிரதமர் வாங்க் ஹொ யன் மற்றும் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஷொ டெய் யங் ஆகியோரை 13.11.2025 பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென்கொரிய நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அதற்கு ஆதரவாக செயல்பட்டதாக குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தென்கொரிய அதிபராக செயல்பட்டவர் யூன் சுக் இயோல். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டில் அவசர நிலையை பிரகடனபடுத்தினார்.
ஊழல் குற்றச்சாட்டில் விசாரணையை எதிர்கொண்டு வந்த யூன் சுக் இயோல் அதில் இருந்து தப்பிக்க அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
பின்னர், அவசர நிலை பிரகடனம் திரும்பப்பெறப்பட்டது. இதனை தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் நீக்கப்பட்டார். புதிய அரசு பதவியேற்றுள்ளது.
அதேவேளை, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது தொடர்பாக யூன் சுக் இயோலை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தென்கொரிய முன்னாள் பிரதமர் வாங்க் ஹொ யன் மற்றும் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஷொ டெய் யங் ஆகிய இருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அதற்கு ஆதரவாக செயல்பட்டதாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan