அஜித்தின் ‘ஏகே 64’ திரைப்படம் கைமாறியதா?
14 கார்த்திகை 2025 வெள்ளி 14:49 | பார்வைகள் : 214
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த இந்த படம் அதிக வசூலை வாரிக் குவித்தது. அடுத்தது இந்த கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைய இருக்கிறது. அதன்படி ‘ஏகே 64’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மோகன்லால், ஶ்ரீலீலா, சுவாசிகா ஆகியோர் நடிக்கப் போவதாகவும், விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.
மேலும் இந்த படமானது முழுக்க முழுக்க ரசிகர்கள் ரசிக்கும் படியான படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் தொடர்பான முன்னணி வேலைகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருவதாக ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில் ரசிகர்கள் பலரும் அதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராகுல் தயாரிக்கப் போவதாகவும் அனிருத் இதற்கு இசையமைக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், அதிக பட்ஜெட் காரணமாக ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து விலகி விட்டதாகவும், அதற்கு பதிலாக மும்பையைச் சேர்ந்த கோல்டுமைன்ஸ் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan