பிரஞ்சுக்காரர்களின் சேமிப்புகளுக்கு வரி விதிக்கும் நடவடிக்கை!!
1 கார்த்திகை 2025 சனி 20:47 | பார்வைகள் : 1071
2026 நிதி மசோதா விவாதத்தில், நாடாளுமன்றம் தற்போதைய அசையா சொத்து செல்வ வரியை (IFI) மாற்றி, “தயாரிப்பு அற்ற செல்வ வரி” (Impôt sur la fortune improductive) என்ற புதிய வரியை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த வரி, வருமானம் தராத நிலங்கள், மதிப்புமிக்க பொருட்கள், வாகனங்கள், டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் தயாரிப்பு முதலீட்டில் சேராத உயிர் காப்பீட்டுத் தொகைகளை உள்ளடக்கியது. தயாரிப்பு தரும் நிலங்கள் அதாவது வாடகைக்கு விடப்படும் நிலங்கள் இதிலிருந்து விலக்குபெற்றுள்ளது, மேலும் வரி விகிதம் 1% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சோசலிஸ்ட் எம்.பி. பிலிப் பிருன் (Philippe Brun) முன்வைத்த "ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மில்லியன் யூரோ விலக்கு" என்ற உபதிருத்தமும் இதில் இணைக்கப்பட்டது. இந்த திருத்தம் 163 ஆதரவு மற்றும் 150 எதிர்ப்பு வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
RN, சோசலிஸ்ட், MoDem மற்றும் Liot குழுக்களின் ஆதரவால் இது நிறைவேறியுள்ளது, ஆனால் பெரும்பாலான இடதுசாரி கட்சிகள் இதற்கு எதிராக வாக்களித்துள்ளன. இது மெரின் லூ பென் முன்மொழிந்த “நிதி செல்வ வரியை” ஒத்ததாகும். சிலர் இதை பலவீனமான செல்வ வரி என விமர்சித்துள்ளனர். அரசு சார்ந்த Renaissance மற்றும் Horizons கட்சிகள், இந்த வரி “பிரஞ்சுக்காரர்களின் சேமிப்புகளுக்கு வரி விதிக்கும் நடவடிக்கை” எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

























Bons Plans
Annuaire
Scan