Paristamil Navigation Paristamil advert login

சிறைக்கைதிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு!!

சிறைக்கைதிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு!!

2 கார்த்திகை 2025 ஞாயிறு 07:57 | பார்வைகள் : 441


பிரெஞ்சு சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

135% அடர்த்தியை பிரெஞ்சு சிறைச்சாலைகள் கொண்டுள்ளன. 62,501 கைதிகள் மட்டுமே சிறைவைக்கக்கூடிய இடத்தில், 84,862 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இது சென்ற ஒக்டோபர் 1 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பாகும்.

அதேவேளை, செப்டம்பர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட தரவுகளின் படி 84,311 கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். 551 கைதிகள் ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளனர்.

அதேவேளை, கடந்த ஒரு வருடத்தில் 5,231 கைதிகள் அதிகரித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்