இந்தியா வெற்றிபெற்றால் மாபெரும் பரிசுதொகையை அறிவிக்க உள்ள பிசிசிஐ
2 கார்த்திகை 2025 ஞாயிறு 08:26 | பார்வைகள் : 136
2025 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றால் மாபெரும் பரிசுத்தொகையை அறிவிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. +
2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாளை நவி மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் மதியம் 3 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
இதில், இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லாத அணிகளான இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றால், ரூ.125 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, 2017 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்று இங்கிலாந்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்திய அணி.
அணியில் இருந்த ஒவ்வொரு வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு அதை விட 10 மடங்கு அதிகமான பரிசுத்தொகை வெல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுவரை அவுஸ்திரேலியா 7 முறையும்,இங்கிலாந்து 4 முறையும், நியூசிலாந்து 1 முறையும் மகளிர் உலகக்கோப்பையை வென்றுள்ளன.
2024 டி20 உலகக் கோப்பையை வென்றதற்கு இதே போல், ரூ.125 கோடி இந்திய ஆடவர் அணிக்கு வழங்கப்பட்டது.


























Bons Plans
Annuaire
Scan