Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

காவல்துறை அதிகாரியை நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்திய போலி காவல்துறை அதிகாரிகள்!

15 September, 2020, Tue 14:00   |  views: 3481

இரண்டு போலி காவல்துறை அதிகாரிகள் இணைந்து ஒரு உண்மையான காவல்துறை அதிகாரியை தடுத்து நிறுத்தியுள்ளனர். 
 
Maisons-Alfort (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Avenue de la République வீதியில் இரண்டு போலி காவல்துறை அதிகாரிகள் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் காவல்துறை ஆடை அணிந்து, கையில் 'ப்ளாஷ்' விளக்குகள் வைத்துக்கொண்டு, வீதிகளில் சென்றவர்களை விசாரித்துக்கொண்டிருந்தனர். சிலரிடம் இருந்து பணம் லஞ்சமாக கூட பெற்றுக்கொண்டிருந்தனர். 
 
ஆனால் நீண்ட நேரம் இந்த 'கொள்ளை' நீடிக்கவில்லை. நள்ளிரவு 1 மணி அளவில், மகிழுந்தில் பயணித்த ஒருவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் கடமை முடித்துக்கொண்டு, சாதாரண உடையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த உண்மையான காவல்துறை அதிகாரி ஆவார். 
 
அவரினை தடுத்து, விசாரித்துக்கொண்டிருந்த போது, இவர்கள் உண்மையான காவல்துறை அதிகாரிகள் இல்லை என்பதை உணர்ந்துகொண்டார். 
 
பின்னர், தனது சகோத அதிகார்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, இந்த போலி அதிகாரிகளிடம் 'தாம் ஒரு காவல்துறை அதிகாரி' என தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட ஆரம்பித்துள்ளனர். 
 
ஆனால் அதற்குள்ளாக சம்பவ இடத்துக்கு வந்திருந்த மேலதிக அதிகாரிகள் அவ் இரு போலி காவல்துறையினரையும் கைது செய்தனர். அவர்களது மகிழுந்தில் கை விலங்கு ஒன்றும், சில தங்க நகைகள் மற்றும் சில வங்கி அட்டைகளும் கைப்பற்றப்பட்டன.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்