இன்று செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
மேஷம்

நீண்ட நாட்களாக இருந்த மனக்குழப்பங்கள் நீங்கும். உத்யோகத்தில் உள்ளவருக்கு அலுவலகத்தில் தங்கள் நேர்மையைக் கண்டு உயரதிகாரிகள் பாராட்டுவர். வேலையில்லாதவருக்கு விரும்பிய வேலை கிடைக்கும். குடும்ப தலைவிகளுக்கு எதிர்பார்த்த ஒரு நற்செயல் நடந்திடும். ்
ரிஷபம்

பங்குச் சந்தை லாபம் தரும். ஆன்லைன் வியாபாரம் செழிப்பாக நடக்கும். வங்கிப் பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும். தொழில் முதலுக்காக தாங்கள் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். அக்கம் பக்கத்து வீட்டார்கள் உதவி புரிவார்கள். வெளிநாட்டிற்கு செல்ல விசா கிடைக்கும்.
்
மிதுனம்

பணவரவு அதிகரித்தாலும் கொஞ்சம் சிக்கன நடவடிக்கையும் அவசியம். அழகு நிலையங்கள் வைத்திருக்கும் பெண்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும். நாத்தனாரிடமிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் செய்திகள் நன்மை தரும்.
்
கடகம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
்
சிம்மம்

விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். கணவர் வீட்டார் அன்பு பாராட்டுவர். வேலை செய்ய விரும்பிய பெண்களுக்கு தாங்கள் விரும்பிய வேலை கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு வீட்டில் உள்ள சலசலப்புகள் நீங்கி மீண்டும் அமைதி நிலை உருவாகும்.
்
கன்னி

பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கைகள் நிகழும். தம்பதிகளுக்குள் நல்ல ஒரு ஒற்றுமை உருவாகும். பிள்ளைகளைப் பற்றின கவலைகள் தீரும். கணவனின் அண்ணன் மற்றும் தம்பி உறவினர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
்
துலாம்

குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. இளம்பெண்களுக்கும், காளையர்களுக்கும் பெரியவர்களின் உதவியால் நல்ல துணை கிடைக்கும். கணவரின் வழி உறவினர்கள் தங்களுடன் நட்பு பாராட்டுவர். உதவியும் புரிவர். மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
்
விருச்சிகம்

வேலைக்கு செல்பவர்களுக்கு தங்கள் மேலதிகாரிகள் உதவுவர். வீட்டில் இருந்தபடி சேலை வியாபாரம் மற்றும் இதர தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். ஒரு சிலர் தங்க ஆபரணங்களை வாங்குவர்.
்
தனுசு

குடும்பத் தலைவிகள் செலவுகள் போக சேமிப்பார்கள். வெளியூர் சுற்றுலா மனதிற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புது நபர்களிடம் தங்கள் அந்தரங்க விஷயத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள். அவர்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
்
மகரம்

கணவர் வீட்டார் வருகை இருக்கும். அவர்களுடன் அமைதியாக செல்லவும். குடும்ப தலைவிகளுக்கு அக்கம் பக்கத்து வீட்டார்கள் நன்மை செய்வார்கள். வியாபாரம் செய்பவர்கள் புதிய பொருட்களை விற்கத் துவங்குவர். வாடிக்கையாளர்கள் பெருகுவர். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள்.
்
கும்பம்

அத்தியாவசிய செலவுகள் இருக்கும். அதற்கேற்ப பணவரவு உண்டாகும். மறைமுக எதிரிகளின் திட்டங்கள் வீணாகும். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் குடும்பவிசயங்களை வெளியிடாதீர்கள். சக மாணவ, மாணவிகளிடம் கொஞ்சம் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
்
மீனம்

சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டவர்களுக்கு தங்கள் பணிகளை விரைவாக முடிப்பீர்கள். காளையர்களுக்கும், கன்னியர்களுக்கும் தாங்கள் விரும்பிய வரன் கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு தாங்கள் வாங்கிய கடனில் ஒரு பகுதியை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். ்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan