Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

காணி விற்பனை

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து எப்படி வென்றது?

15 July, 2019, Mon 4:50   |  views: 1351

2019 உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக வெற்றிவாகை சூடியது இங்கிலாந்து அணி.
 
உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் நடந்ததிலேயே மிகவும் இதுவே பரபரப்பான போட்டி என்று சற்றும் தயங்காமல் சொல்லக்கூடிய அளவுக்கு ஆட்டத்தின் போக்கு அமைந்தது.
 
50 ஓவர்கள் முடிவில் டையில் முடிந்த போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்ததால், சூப்பர் ஓவருக்கான விதிமுறைகளின்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 
சூப்பர் ஓவரில் முடிந்த போட்டி பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் போட்டி நுழைந்தது.
 
அப்போது இங்கிலாந்து வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டன. மூன்றாவது பந்தில் சிக்ஸர் அடிக்கப்பட்டது.
 
அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் ஓடிய நிலையில் ஓவர் துரோ மூலம் அந்த பந்து பவுண்டரி சென்றதால் இங்கிலாந்துக்கு அந்த பந்தில் மொத்தம் ஆறு ஓட்டங்கள் கிடைத்தன. அடுத்த பந்தில் ஒரு ரன் ஓடிய நிலையில் இரண்டாவது ரன் ஓடிய ரஷீத் ரன் அவுட் செய்யப்பட்டார்.
 
கடைசி பந்தில் இங்கிலாந்துக்கு இரண்டு ஓட்டங்கள் தேவைப்பட்டன. கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. அந்நிலையில் ஒரு ரன் எடுத்த இங்கிலாந்து, இரண்டாவது ரன்னுக்கு முயன்றபோது வுட்ஸ் ரன் அவுட் செய்யப்பட்டார்.
 
எனவே இங்கிலாந்து கடைசியில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமன் செய்தது.
 
எனவே சூப்பர் ஓவர் முடிவு செய்யப்பட்டது. சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி முதலில் களம் இறங்கியது. அந்த அணியின் சார்பாக களமிறங்கிய ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இரண்டு பவுண்டரிகளை சேர்த்து 15 ஓட்டங்களை எடுத்தனர். நியூசிலாந்து அணியின் போல்ட் பந்து வீசினார்.
 
அடுத்து நியூசிலாந்து அணியின் சார்பாக கப்தில் மற்றும் நீஷம் களமிறங்கினர். இங்கிலாந்தின் சார்பாக ஆர்ச்சர் பந்து வீசினார். சூப்பர் ஓவரின் முடிவில் நியூசிலாந்து அணியும் 15 ரன்களை எடுத்திருந்தது. எனவே சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது.
 
டையில் முடிந்த சூப்பர் ஓவர்
சூப்பர் ஓவர் டையில் முடிந்தால் தங்களது இன்னிங்ஸிலும், சூப்பர் ஓவரிலும் அதிக பவுண்டரிகளை எடுத்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
 
அதன்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 
இங்கிலாந்து அணி 24 பவுண்டரிகளையும், நியூசிலாந்து அணி 16 பவுண்டரிகளையும் அடித்திருந்தன.
 
அதே போல் சூப்பர் ஓவரில் ஒரு அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழக்க முடியும். இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழக்கவில்லை ஆனால் நியூசிலாந்தின் கப்தில் ரன் அவுட் ஆனார்.
 
இதன் மூலம் முதன்முறையாக கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது இங்கிலாந்து அணி.

 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

ANNONCES

Boutique 11m2
38000 €
Paristamil Annonce