Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

T-20 உலகக்கிண்ணத்தில் சம்பியன் கிண்ணம் யாருக்கு?

8 November, 2019, Fri 3:34   |  views: 980

ரி-20 உலகக்கிண்ணம் குறித்த பல சுவாரஸ்யமான விடயங்களை அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
 
இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் பல விடயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
 
இந்த நிகழ்வின் போது, அடுத்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ரி-20 உலகக்கிண்ண தொடரில் சம்பியன் பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம் என்று கேட்கப்பட்டது
 
அதற்கு பதிலளித்த அவர், ‘அனேகமாக இந்திய அணி அரையிறுதி அல்லது இறுதிப்போட்டிக்கு வந்து விடும். சம்பியன் கிண்ணத்தை வெல்லப்போவது யார்? என்பதை என்னால் கணிக்க முடியாது.
 
இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன். ரி-20 கிரிக்கெட்டில் உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான பாகிஸ்தானையும் புறந்தள்ளி விட முடியாது.
 
ஆனால், ரி-20 கிரிக்கெட் அதிஷ்ட லாப சீட்டு போன்றது. எனவே கடைசி ஓட்டம் எடுக்கும் வரையோ அல்லது கடைசி விக்கெட் விழும் வரையோ வெற்றியாளரை கணிப்பது கடினம்’ என கூறினார்.
 
கில்கிறிஸ்ட் கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் அறிமுகம் பெற்றார். தற்சமயம் கிரிக்கெட் அரங்கில் 20 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், சங்கக்காரா உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் விக்கெட் காப்பாளர்கள் சிலர், கில்கிறிஸ்ட் குறித்த தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.
 
இதில், அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும், கில்கிறிஸ்ட்டுடன் சமகாலத்தில் அவுஸ்ரேலிய அணியில் விளையாடியவருமான பிரட் ஹட்டின், இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளராக மிக நிண்ட காலம் கடமையாற்றிய அலெக் ஸ்ரீவார்ட் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
 
இதில் குறிப்பாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், எம்.சி.சி. இன் தற்போதைய தலைவருமான குமார் சங்கக்காரா, ‘விக்கெட் காப்பாளர்கள் துடுப்பாட்டத்திலும் சிறந்து விளங்க அடித்தளம் இட்டவர் ஆடம் கில்கிறிஸ்டே’ என புகழாரம் சூட்டியுள்ளார்.
 
கிரிக்கெட் போட்டிகளில் இரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ரி-20 கிரிக்கெட்டின் திருவிழா என வர்ணிக்கப்படும் ரி-20 உலகக்கிண்ண தொடரை கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
 
இந்த எதிர்பார்ப்பு மிக்க ரி-20 உலகக்கிண்ண தொடரில் 7ஆவது அத்தியாயம், அடுத்த வருடம் அவுஸ்ரேலியாவில் ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
 
மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், ஒட்டுமொத்தமாக 45 போட்;டிகள் நடைபெறவுள்ளன. ஏழு மைதானங்களில் இத்தொடரின் போட்டிகள் நடைபெறுகின்றன.
 
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ரி-20 உலகக்கிண்ண தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு முறையும், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் சம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்