Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

கொழுப்பை குறைக்கும் ‘கிரீன் டீ’

12 December, 2019, Thu 5:06   |  views: 1267

 பச்சை தேயிலை (கிரீன் டீ) மிகவும் ஆரோக்கியமான ஒரு பானம். முழுவதும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்த ஒரு சத்துமிக்க ஒரு பானம். மனித உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியையும், சக்தியையும் தர வல்லது. இது மனித மூளையின் செயல்பாடுகளை துரிதப்படுத்துகிறது. உடலில் உள்ள கொழுப்பு கரைக்கப்படுகிறது. கேன்சரை தடுக்கிறது.

 
தேநீர்:- இதில் பல தாவர மூலக்கூறுகள் உள்ளது. அவை அனைத்தும் சேர்ந்து இதை ஒரு சுவையான பானம் ஆக்குகிறது. முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் பாலிபினால்கள் அதிகம் நிறைந்துள்ளன, இது வீக்கம் குறைக்க உதவுகிறது மற்றும் கேன்சரை விரட்ட பயன்படுகிறது. 30 சதவீதம் பாலிபினால்கள் உள்ளது மற்றும் காட்டகேன் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் செல்களின் சேதத்தை தடுக்கிறது. புற்றுநோய் எதிர்ப்பு திறனை உருவாக்குகிறது. வயது முதிர்வை தடுக்கிறது. மற்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
 
 
இபிசிஜி என்னும் முக்கியமான சக்தி வாய்ந்த மூலக்கூறு தேநீரில் அமைந்துள்ளது. பலவிதமான நோய்களை தீர்க்க இது உதவு கிறது. இதில் தாது உப்புகள் நிறைந்துள்ளன. நல்ல உயர்தரமான தேநீரை தேர்ந்தெடுத்தல் சிறந்தது. தரம் குறைந்த தேயிலையில் புளுரைடு அதிகம் நிறைந்திருக்கும். எனவே தரமானதை தேர்ந்தெடுத்தல் நல்லது. மூளையின் செயல்பாடுகளை துரிதப்படுத்தி நம்மை புத்திசாலிகளாக்குகிறது. முக்கியமான ஒரு மூலப்பொருள் காபின் ஒரு ஊக்கியாக செயல்படுகிறது.
 
எடைகுறைவு சிகிச்சை:- கிரீன் டீயினால் கிடைக்கும் பிரபலமான நன்மைகளுள் ஒன்றுதான் எடை குறைய உதவும் என்பது. இதில் உள்ள பாலீபீனால் என்னும் சத்து தான் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் மற்ற டீக்களை விட கிரின் டீயில் தான் ஏராளமான கேட்டசின்கள் உள்ளன.
 
உடல் எடையைகுறைக்க முயல்பவர்களுக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இதை சூடான நீரில் தொடர்ந்து பருகுபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்புகள் படியவிடாமல் செய்து உடலுக்கு தேவையான நன்மையான சக்தியாக உடல் எடை கூடுவது உடல் பருமன் அடைவது போன்ற பிரச்சினைகளை நீக்குகிறது.
 
கொழுப்பு குறைவு:- கேட்டசின்கள் என்பது ஆன்டி ஆக்ஸிடன்ட்கள். இவை உடலில் உள்ள அதிகப் படியான கொழுப்பு களைத் தடுக்கும். கிரீன் டீயில் கேட்டசின், கேலோகேட்டசின், எபிகேட்டசின் கேலேட் போன்ற பொருட்கள் உள் ளன. அத்துடன் கிரீன் டீயில் மிகவும் சுறுசுறுப்பான எபிகேலோகேட்டசின் -3- கேலேட் அதிகம் உள்ளது.
 
கலோரி எரிப்பு:- கிரீன் டீயில் எடை யைக் குறைக்க உறுதுணையாக இருக்கும் மற்றொரு ஊட்டச்சத்தான காப்பைன் உள்ளது. இந்த காப்பைன் கொழுப்பைக் குறைப்பதோடு, கலோரிகளையும் குறைக்கும்.ரத்த அழுத்தம்:- ரத்த அழுத்த பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், அன்றாடம் கிரீன் டீயைக் குடித்து வர, அது ரத்த அழுத்த பிரச்சனையைத் தடுப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இதய ஆரோக்கியம்:- கிரீன் டீ உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதால், அது இதய நோய் வரும் அபாயத்தை குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறை கிரீன் டீ பருகுபவர்களுக்கு இதயம் சம்பந்தமான வியாதிகள் ஏற்படும் ஆபத்து குறைவதாக ஜப்பான் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதிலிருக்கும் “கேட்டசின்” எனும் வேதிப் பொருள் இதயத்தை காப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 
ஆர்த்திடிஸ்:- கிரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறுகளின் உற்பத்தியைத் தடுத்து, உடலினுள் ஏற்படும் காயங்கள் மற்றும் ஆர்த்திரிடிஸ் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். ஆகவே எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் கிரீன் டீ குடியுங்கள்.
 
ஞாபகத்திறன்:- கிரீன் டீயை அதிகம் குடித்து வருபவர்களுக்கு மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்த தேயிலையில் இருக்கும் மூலப்பொருட்கள் மூலையில் இருக்கும் செல்களை தூண்டி, ஞாபகத்திறனை மிகுதியாக மேம்படுத்துகிறது. “அல்சைமர்” எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படுவதை கிரீன் டீ தடுப்பதாக கூறுகிறார்கள். மேலும் கிரீன் டீயில் காப்பைனுடன், டு-தியனைன் என்னும் அமிமேனா அமிலமும் உள்ளது. இவை இரண்டும் மூளையின் செயல்பாட்டை சீராக வைத்து கொள்கிறது.
 
பல் நோய்கள்:- கிரீன் டீயில் இருக்கும் வேதிப்பொருட்கள் உடலில் எப்பகுதியிலும் இருக்கும், கிருமிகளை அழிக்கவல்லது அதிலும் குறிப்பாக பல் சொத்தை மற்றும் அது ஏற்படுவதற்கு காரணமான பல் ஈறுகள் மற்றும் பல் இடுக்குகளில் இருக்கும் கிருமிகளை அழித்து பற்களை பாதுகாக்கிறது.
 
சுறுசுறுப்பு:- கிரீன் டீ அதிகம் அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் பிராணவாயு மூலக்கூறுகளை அதிகம் தூண்டி, உடலும் மனமும் உற்சாகமடைய செய்கிறது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கும் சக்தியை தருகிறது.
 
சிறந்த டயட்:- ஒரு கப் கிரீன் டீயில் 30-50 மி.கி காப்பைன் உள்ளது. கிரின் டீ எடையைக் குறைக்கும் என ஓரே நாளில் அளவுக்கு அதிகமாக குடித்தால் பக்கவிளைவுகளுடன் தான் உடல் எடையைக் குறைக்க முடியும். இதனை அளவாக தினமும் ஒரு கப் என குடித்து வர பாதுகாப்பான வழியில் உடல் எடை குறையும். ஆகவே எடையைக் குறைக்க உதவும் பானங்களுள் சிறந்த ஒன்றாக கிரீன் டீயை சொல்லலாம்.
 
புற்றுநோய் :- சில ஆய்வுகளில் எபிகேலோகேட்டசின்-3 கேலேட்டிற்கு, உடலில் வளரும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து அழிப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ரத்தத்தை சுத்தம் செய்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்.
 
நோய் எதிர்ப்பு மண்டலம்:- கிரீன் டீயில் உள்ள லிதியனைன்; குடிப்பதால் உண்டாகும் பக்க விளைவுகளைத் தடுக்கும். இந்த அமினோ அமிலம். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்கும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கையும் குறையும்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி