Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

திருக்குறள் கதைகள்!

15 March, 2020, Sun 10:46   |  views: 2596

அமுதன் அந்த கிராமத்தில் ஆசிரியர். அவர் சிறந்த அறிவு கொண்டிருந்ததோடு, அன்பும் அடக்கமும் மிகுந்தவராக விளங்கினார். ஏழைக் குழந்தைகளுக்காக இலவச பாடசாலை ஒன்றை அமைத்து கல்வி போதித்து வந்தார். மக்கள் ஆசிரியரின் மீது நல்ல மரியாதை வைத்திருந்தனர்.
 
ராமு என்ற செல்வந்தனும், அதே கிராமத்தில் வசித்து வந்தான். முரடனாகிய இவன் மீது கிராம மக்களுக்கு மதிப்போ, மரியாதையோ இல்லை. செல்வந்தனாக இருந்தும் தனக்கு கிடைக்காத மதிப்பும், மரியாதையும் ஆசிரியர்க்கு கிடைக்கிறதே? என்று ராமு ஆசிரியரின் மீது பொறாமை கொண்டான்.
 
ஆசிரியரை எங்கு கண்டாலும், ராமு வம்புக்கு இழுப்பான். அவமானப்படுத்த நினைப்பான்.
 
ஒருநாள் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த பின் ஆசிரியர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
 
அப்போது ராமு தன் தோட்டத்திலிருந்து பறித்த புசணிக்காயோடு வந்து கொண்டிருந்தான். ராமு உடன் அவனது இரு தோழர்களும் வந்தனர்.
 
ராமுவையும், அவனது தோழர்களையும் கண்ட ஆசிரியர் ஒதுங்கி நடந்தார்.
 
ஆனால் அவர்களோ, என்ன, அமுதன் பள்ளிக்கூடத்திலிருந்து வருகிறீர்களா? என்று வழியை மறித்தபடி கேட்டு வம்பிழுத்தனர்.
 
ஆமாம் ராமு. நான் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும் வழியை விடு என்றபடி ஆசிரியர் விலகி நடக்கத் தொடங்கினார். நீங்கள் பெரிய அறிவாளி என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். அப்படியானால் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் விட்டுவிடுகிறோம். இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் சரியாகப் பதில் சொல்லிவிட்டால் உங்கள் வழிக்கே நான் வரமாட்டேன் என்று வீம்பாகப் பேசினான்.
 
சரி, உன் கேள்வி என்னவென்று கேளு ராமு! எனக்கு நேரமாகிறது என்றார் ஆசிரியர்.
 
என் கையிலுள்ள இந்த புசணிக்காயின் எடை எவ்வளவு? நீங்கள் சொல்லும் எடை சரியாக இருக்கிறதா? என்று நாங்கள் நிறுத்திப் பார்ப்போம். சரியாக சொல்லாவிட்டால் நீங்கள் முட்டாள் என்று ஒத்துக் கொள்ள வேண்டும் என்று திமிராகப் பேசினான் ராமு.
 
ஆசிரியர் ஒரு கணம் யோசித்தார். ராமு இந்த புசணிக்காய் உன் தலையின் எடைதான் இருக்கிறது. வேண்டுமானால் நிறுத்துப் பார்த்துக்கொள் என்று பதில் சொன்னார் ஆசிரியர்.
 
இதை கேட்ட ராமுவும், அவனது கூட்டாளிகளும் அதிர்ந்து போனார்கள்.
 
அட ஆசிரியர் நம்மை மடக்கிவிட்டாரே? புசணிக்காயின் எடையை சரி பார்க்க நம் தலையை கொய்தால் அல்லவா முடியும். தலையை கொய்ய முடியுமா? புசணியை எடைபோட முடியுமா? என்று திகைத்த ராமு, தன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஓடியே போனான்.
 
அதன்பின் அவன் ஆசிரியரிடம் வம்பு செய்வதே இல்லை!
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்

கருநாக பாம்பும் காகமும்...!!

29 November, 2020, Sun 17:16   |  views: 363

வெட்டுக்கிளியும் ஆந்தையும்!

21 November, 2020, Sat 17:10   |  views: 753

சிங்கமும் சிறு எலியும்

15 November, 2020, Sun 16:37   |  views: 563

பொய் சொல்லாதே...!!

10 November, 2020, Tue 17:26   |  views: 767

பொய் சொல்லாதே...!

3 November, 2020, Tue 17:12   |  views: 1092
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்