Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

குடும்பங்களின் மகத்துவத்தை உணர்த்திய விசு - ஓர் பார்வை

23 March, 2020, Mon 9:35   |  views: 816

  தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் விசு. மேடை நாடகம், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தன் சினிமா வாயிலாக குடும்பங்களின் மகத்துவத்தை எளிமையாக எடுத்துரைத்தவர். இன்று அவர் நம்மோடு இல்லை. ஆனால் அவரின் படைப்புகள் காலத்திற்கும் பேசப்படும். விஸ்வநாதன் என்கிற விசு சினிமாவில் கடந்த வந்த பாதையை சற்றே ரீ-வைண்ட் செய்து பார்ப்போம்...

 
பயோகிராபி
இயற்பெயர் - எம்.ஆர்.விஸ்வநாதன்
சினிமா பெயர் - விசு
பிறப்பு - 01-ஜுலை-1945
இறப்பு - 22-மார்ச்-2020
பிறந்த இடம் - மரக்காணம் - தமிழ்நாடு
பணி - திரைக்கதை வசனகர்த்தா - இயக்குநர் - நடிகர் - தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்.
சினிமா அனுபவம் - 1978-லிருந்து
துணைவி - உமா
குழந்தைகள் - லாவண்யா - சங்கீதா - கல்பனா
உடன் பிறந்தோர் - கிஷ்மு (இறப்பு) - எம் ஆர் ராஜாமணி (இறப்பு)
இயக்கிய திரைப்படங்கள் - 25 திரைப்படங்கள்
 
வாழ்க்கை வரலாறு
 
மேடை நாடகங்களின் மூலம் திரைத் துறைக்குள் நுழைந்தவர் விசு. இயக்குநர் கே பாலசந்தரிடம் உதவி இயக்குநராகவும் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்து தனது விடா முயற்ச்சியால் தமிழ் சினிமாவின் உச்சம் தொட்டவர் விசு. பாலசந்தரின் உதவியாளர்களான அமீர்ஜான், சுரேஷ்கிருஷ்ணா, வசந்த் போன்ற வெற்றி இயக்குநர்களின் வரிசையில் நடிகர், கதைவசனகர்த்தா, இயக்குநர் என்ற பன்முகத் தன்மையோடு பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்திருக்கின்றார் விசு. இவருடைய நகைச்சுவை கலந்த வசனமும் அவற்றை ஏற்ற இறக்கத்தோடு பேசும் இவரது பாணியும் வெகுவாக தமிழ் ரசிகர்களை கவர்ந்ததென்றே சொல்ல வேண்டும்.
 
இவர் நடிகராக அறிமுகமான முதல் திரைப்படம் "குடும்பம் ஒரு கதம்பம்" இத்திரைப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியவரும் இவரே. படத்தை இயக்கியவர் இயக்குநர் எஸ் பி முத்துராமன். இவருடைய மேடை நாடகங்களான "பாரதமாதாக்கு ஜே" "சதுரங்கம்" என்ற பெயரில் ரஜினிகாந்த் நடிப்பில் சினிமாவாக வெளிவந்தது. "மோடி மஸ்தான்" என்ற நாடகம்தான் இவருடைய இயக்கத்திலேயே "மணல்கயிறு" என்ற திரைப்படமானது.
 
சினிமாவைத் தவிர சின்னத் திரையிலும் இவருடைய பணி பேசும்படியாகவே இருந்தது. தனியார் தொலைக்காட்சியில் "அரட்டை அரங்கம்" என்ற மேடை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வந்தார். அதன் பிறகு இன்னொரு தொலைக்காட்சியில் "மக்கள் அரங்கம்" என்ற மேடை நிகழ்ச்சியையும் நடத்தி சின்னத்திரை ரசிகர்கள் நெஞ்சங்களிலும் இடம் பிடித்தார்.
 
நாடகம், சினிமா, சின்னத்திரை என அனைத்திலும் தனக்கென ஒரு தனி பாணியுடன் முத்திரை பதித்த விசு 25 படங்கள் வரை இயக்கியுள்ளார். தான் இயக்கிய படங்கள் மட்டுமின்றி பிற இயக்குநர்களின் இயக்கத்திலும் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்திலும், துணை கதாபாத்திரம் ஏற்றும் நடித்திருக்கின்றார். "மிஸ்டர் பாரத்" "மன்னன்", "உழைப்பாளி", "அருணாச்சலம்" என தொடர்ந்து ரஜினிகாந்த் படங்களிலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்றும் நடித்துள்ளார்.
 
விருதுகள்
* 1986 ஆம் ஆண்டு சிறந்த பொழுது போக்கு திரைப்படத்திற்கான "தேசிய விருது"
* "சம்சாரம் அது மின்சாரம்" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
* 1990 ஆம் ஆண்டு சிறந்த கதை வசனகர்த்தாவிற்கான "தமிழ் நாடு அரசு விருது"
* "வரவு நல்ல உறவு" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
* 1992 ஆம் ஆண்டு சமூக பிரச்சனைகள் நிறைந்த சிறந்த திரைப்படத்திற்கான
 
* "தேசிய விருது" "நீங்க நல்லா இருக்கணும்" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
 
விசு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள்
1.மணல்கயிறு
2.கன்மணி பூங்கா
3.டௌரி கல்யாணம்
4.புயல் கடந்த பூமி
5.ராஜதந்திரம்
6.வாய் சொல்லில் வீரனடி
7.நாணயம் இல்லாத நாணயம்
8.அவள் சுமங்கலிதான்
9.புதிய சகாப்தம்
10.கெட்டி மேளம்
11.சிதம்பர ரகசியம்
12.சம்சாரம் அது மின்சாரம்
13.திருமதி ஒரு வெகுமதி
14.காவலன் அவன் கோவலன்
15.பெண்மணி அவள் கண்மணி
16.சகலகலா சம்மந்தி
17.வரவு நல்ல உறவு
18.வேடிக்கை என் வாடிக்கை
19.உரிமை ஊஞ்சலாடுகிறது
20.நீங்க நல்லா இருக்கணும்
21.பட்டுக்கோட்டை பெரியப்பா
22.வா மகளே வா
23.மீண்டும் சாவித்திரி
 
24.சிகாமணி ரமாமணி
 
 
விசு கதை திரைக்கதை வசனம் எழுதிய திரைப்படங்கள்
1.சதுரங்கம் - கதை வசனம்
2.அவன் அவள் அது - திரைக்கதை வசனம்
3.தில்லு முல்லு - திரைக்கதை வசனம்
4.சிம்லா ஸ்பெஷல் - கதை வசனம்
5.கீழ்வானம் சிவக்கும் - திரைக்கதை வசனம்
6.குடும்பம் ஒரு கதம்பம் - கதை திரைக்கதை வசனம்
7.கண்மணி பூங்கா - கதை திரைக்கதை வசனம்
8.மணல்கயிறு - கதை திரைக்கதை வசனம்
9.புதுக்கவிதை - திரைக்கதை வசனம்
10.டௌரி கல்யாணம் - கதை திரைக்கதை வசனம்
11.நல்லவனுக்கு நல்லவன் - வசனம்
12.புயல் கடந்த பூமி - கதை திரைக்கதை வசனம்
13.ராஜ தந்திரம் - கதை திரைக்கதை வசனம்
14.வாய் சொல்லில் வீரனடி - கதை திரைக்கதை வசனம்
15.நாணயம் இல்லாத நாணயம் - கதை திரைக்கதை வசனம்
16.அவள் சுமங்கலிதான் - கதை திரைக்கதை வசனம்
17.புதிய சகாப்தம் - கதை திரைக்கதை வசனம்
18.கெட்டி மேளம் - கதை திரைக்கதை வசனம்
19.சிதம்பர ரகசியம் - கதை திரைக்கதை வசனம்
20.மிஸ்டர் பாரத் - திரைக்கதை வசனம்
21.சம்சாரம் அது மின்சாரம் - கதை திரைக்கதை வசனம்
22.திருமதி ஒரு வெகுமதி - கதை திரைக்கதை வசனம்
23.காவலன் அவன் கோவலன் - கதை திரைக்கதை வசனம்
24.பெண்மணி அவள் கண்மணி - கதை திரைக்கதை வசனம்
25.சகலகலா சம்மந்தி - கதை திரைக்கதை வசனம்
26.வரவு நல்ல உறவு - கதை திரைக்கதை வசனம்
27.வேடிக்கை என் வாடிக்கை - கதை திரைக்கதை வசனம்
28.உரிமை ஊஞ்சலாடுகிறது - கதை திரைக்கதை வசனம்
29.நீங்க நல்லா இருக்கணும் - கதை திரைக்கதை வசனம்
30.பட்டுக்கோட்டை பெரியப்பா - கதை திரைக்கதை வசனம்
31.வா மகளே வா - கதை திரைக்கதை வசனம்
32.மீண்டும் சாவித்ரி - கதை திரைக்கதை வசனம்
33.மனல்கயிறு 2 - வசனம்
34.தில்லு முல்லு - திரைக்கதை வசனம்

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES