Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

லங்கன் பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகும் முக்கிய வீரர்கள்!

19 November, 2020, Thu 14:51   |  views: 686

இலங்கையில் முதல்முறையாக இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள லங்கன் பிரீமியர் லீக் (எல்.பி.எல்) ரி-20 தொடரில் இருந்து பல முன்னணி வீரர்கள் விலகியுள்ளனர்.
 
அத்தோடு பல விளையாடுவர்களா என்பது குறித்த சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும், இத்தொடரின் முதல் 10 நாட்களுக்கான போட்டிகளை நடத்துவதிலும் சிக்கல் நிலை எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.
 
இந்த தொடரில் இடம்பெற்றுள்ள காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் சர்ப்ராஸ் அகமது இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
 
ரி-20 நட்சத்திரங்களான கிறிஸ் கெய்ல் மற்றும் லசித் மாலிங்க ஆகியோரும் இத்தொடரில் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
 
இலங்கை ரி-20 அணியின் தலைவரான லசித் மாலிங்க, இத்தொடரில் விளையாடுவதா இல்லையா என்பது இரு மனதில் உள்ளதாக கூறப்படுகின்றது. வெவ்வேறு ஆதாரங்களை மேற்கோள் காட்டி, மாலிங்க வெளியேறுவதற்கான விருப்பத்தை சுட்டிக்காட்டியதாகக் பிரபல ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
அதேபோல, மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல், டஸ்கர்கருடனான தனது ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என கூறப்படுகின்றது. குறிப்பாக அவர் 2020ஆம் ஆண்டு தொடரில் விளையாடுவது நிச்சயமற்ற தன்மையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன், கொழும்பு கிங்ஸ் அணி பயிற்றுவிப்பாளர் டேவ் வாட்மோர் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். அதற்கு பதிலாக முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கபீர் அலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
ஆனால் கபீர் இப்போது கொவிட்-19க்கு சாதகமாக சோதனை செய்ததால், அவர் லீக்கில் இருந்து விலக வாய்ப்புள்ளது. கொழும்பு அணியை யார் பயிற்றுவிப்பார்கள் என்பது இப்போது தெளிவாகத் தெரியவில்லை.
 
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் டஸ்கர்கருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 2017ஆம் ஆண்டு முதல் எந்த கிரிக்கெட்டையும் விளையாடவில்லை.
 
வேகப்பந்து வீச்சாளர்களான வஹாப் ரியாஸ் மற்றும் லியாம் பிளங்கெட் ஆகியோரும் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
லங்கன் பிரீமியர் லீக் (எல்.பி.எல்) ரி-20 தொடர், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை தொடரை நடைபெறவுள்ளது. இத்தொடரின் போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS