25 January, 2021, Mon 2:29 | views: 735
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டம், புளியங்குளம், சிங்காநல்லூர், ரொட்டிகடை மைதானம், காலப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ‘வேல்'-ஐ கையில் எடுத்து விட்டார். நீங்கள் அனைவரும் அந்த படத்தை பார்த்திருப்பீர்கள். யாரெல்லாம் கடவுளை இழிவாக பேசினார்களோ, அதே கடவுளால் இன்றைக்கு அவர்கள் கையிலேயே வேலை கையில் கொடுத்து காட்சி அளிக்கின்ற காட்சியை நாம் பார்க்கிறோம்.
ஆனால் ஸ்டாலின் வெளியிலே பேசுவது ஒன்று, உள்ளே இருப்பது ஒன்று. நீங்கள் முருகனுடைய வேலை மட்டும் பெற்றால் உங்களுக்கு இறைவன் வரம் கொடுக்கமாட்டார். இறைவன் வரம் கொடுப்பது அ.தி.மு.க.வுக்கு தான். எப்படி நாடகம் நடத்துகிறார்கள் என்று பாருங்கள். வேல் பிடித்தால்தான் எதிர்க்கட்சி வரிசைக்கு கூட போக முடியும் என்ற எண்ணத்தை இறைவன் மு.க.ஸ்டாலினிடம் உருவாக்கி இருக்கிறார்.
தெய்வத்தை நம்பியவர்கள் கைவிடப்பட்டதாக சரித்திரம் இல்லை. ஆனால் போலியாக தெய்வத்தை எண்ணுகின்றவர்களுக்கு தெய்வம் என்ன கொடுக்கும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். தெய்வ குணம் கொண்ட கட்சி அ.தி.மு.க. தான். இதற்கு நேர் எதிர் தி.மு.க. அவர்களிடம் அராஜகம், அடாவடித் தனம், ரவுடித்தனம் எல்லாம் இருக்கிறது. நாம் மக்களை பார்த்து கும்பிட்டால் மக்கள் இரண்டு விரலை காட்டுகிறார்கள். ஆகவே நடிக்கிறவர்கள் என்றைக்கும் முன்னுக்கு வர முடியாது. உழைக்கிறவர்கள் தான் முன்னுக்கு வர முடியும். முருக பக்தர்கள் நீண்ட நாட்களாக தைப்பூசம் அன்று பொது விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கையை நிறைவேற்றிய அரசு அ.தி.மு.க. அரசு.
முருக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக தைப்பூசம் அன்று பொதுவிடுமுறை வழங்கி உள்ளோம். அ.தி. மு.க.வை பொறுத்தவரையில் அனைத்து மதத்தையும் சமமாக பாவிக்கின்றோம். அந்த அடிப்படை தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
தி.மு.க அப்படி கிடையாது, பகல் வேஷம் போடுகிறார்கள். தேர்தல் வந்து விட்டதால் இப்போதுதான் வேல் அவர் கண்ணுக்கு தெரிகிறது. இதுவரைக்கும் வேல் அவர் கண்ணுக்கு தெரியவில்லை. ஆக, கடவுள் உங்களுக்கு உரிய நேரத்தில், உரிய தண்டனையை தேர்தல் மூலம் கொடுப்பார்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு வந்து மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தி கருத்து கேட்டார். இதே போன்று 2019-ம் ஆண்டு ஒரு கூட்டம் போட்டு, மக்களிடம் இல்லாததை சொல்லி, மக்களை குழப்பி அதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலிலே வெற்றி பெற்றார்கள். அதே குழப்பத்தை இந்த தேர்தலிலும் ஏற்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்கிறார்கள்.
இப்போதும் மக்களை குழப்பி, அரசியல் ஆதாயம் தேட மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார். 2011 வரை தி.மு.க ஆட்சியில் கடுமையான மின்வெட்டு, இதனால் தொழில் நகரங்களான கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க முடியவில்லை. பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. பலருக்கு வேலையில்லா சூழ்நிலை ஏற்பட்டது. இன்றைக்கு அந்த நிலையை எல்லாம் மாற்றி தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி தந்துள்ளோம்.
ஜெருசலேம் புனிதப்பயணம் செல்வதற்கான நிதியுதவியை ரூ.37,000 ஆக உயர்த்தியிருக்கிறோம். இந்த அரசு மக்களுடைய அரசு, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற அரசு, சிறுபான்மையின மக்களையும் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கின்ற அரசு.
இவ்வாறு அவர் பேசினார்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() மின்சார கார்களை பயன்படுத்தினால் எரிபொருள் இறக்குமதியை குறைக்கலாம் - நிதின் கட்கரி பேச்சு20 February, 2021, Sat 3:56 | views: 694
![]() காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட அடிக்கல் நாட்டு விழா: ஏற்பாடுகள் பணிகள் தீவிரம்20 February, 2021, Sat 3:54 | views: 762
![]() இந்தியாவிடம் இருந்து 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் வாங்கும் இலங்கை20 February, 2021, Sat 3:52 | views: 572
கொரோனா ஊரடங்கை மீறியவர்கள் மீதான 10 லட்சம் வழக்குகள் ரத்து; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு20 February, 2021, Sat 3:50 | views: 563
![]() மோடி அரசு மக்களுக்கான அரசல்ல: இ.கம்யூ., டி.ராஜா குற்றச்சாட்டு19 February, 2021, Fri 4:07 | views: 588
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |