19 February, 2021, Fri 4:07 | views: 717
இது மக்களுக்கான அரசு, மக்களுக்கான திட்டம் என மோடி அடிக்கடி கூறுவார். ஆனால், அவரது அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக செயல்படுகிறது'' என மதுரையில் நடந்த இ.கம்யூ., அரசியல் மாநாட்டில் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.அவர் பேசியதாவது: அரசியல் அமைப்பு சட்டப்படி இந்தியா மதச்சார்பற்ற நாடு. இந்திய அரசு மக்கள் நல அரசாக இருக்க வேண்டும், ஆனால், மோடி அரசு மத வெறியை துாண்டும் இந்துத்துவ அரசாக உள்ளது. மதச்சார்பின்மையை குழி தோண்டி புதைத்துள்ளது. மோடி பார்வையில் செல்வத்தை உற்பத்தி செய்வோர் விவசாயிகளோ, தொழிலாளர்களோ அல்ல. கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகள்.அதன் விளைவு தான் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக மாறி வருகின்றன. இது மக்களுக்கான அரசு, மக்களுக்கான திட்டம் என மோடி அடிக்கடி கூறுவார். ஆனால், அவரது அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக செயல்படுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு மோடிக்கு எடுபிடியாக இருக்கிறது.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளியுங்கள்மாநில செயலர் முத்தரசன் பேசியதாவது: லோக்சபா தேர்தலுக்கு முன் கோவையில் கூட்டணி கட்சிகளுடன் இந்திய கம்யூ., அரசியல் மாநாடு நடத்தியது. இதன் விளைவாக தமிழகம், புதுச்சேரியில் 40ல் 39 இடங்களை வென்றோம்.
மதுரை அரசியல் மாநாடும் சட்டசபை தேர்தலை வென்று தரும். அ.தி.மு.க., பணம், பா.ஜ., அதிகாரத்தை நம்பி களத்தில் நிற்கிறது. பொதுக் கூட்டத்தில் பிரியாணி, மது, ரூ.300 கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்கள். அங்கு வரும் யாரும் அ.தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க போவது இல்லை.
பழனிசாமி மீண்டும் முதல்வராகலாம் என கனவு காண்கிறார். லோக்சபா தேர்தலில் அவர் சொந்த தொகுதி, ஊரில் கூட அ.தி.மு.க.,விற்கு யாரும் ஓட்டளிக்கவில்லை. அதேநிலை இந்த தேர்தலிலும் வரும். மதச்சார்பின்மை காக்க தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.மதுரையில் நடந்த இந்திய கம்யூ., மாநாட்டில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேசியது:தமிழகத்தை மீட்க வேண்டும்மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: பழனிசாமி அரசுக்கு முதுகெலும்பு இல்லை.
தமிழகம் கட்டிக் காத்த மாநில உரிமைகள் அனைத்தையும் பா.ஜ.,விடம் பறிகொடுத்து விட்டார். நீட், புதிய கல்வி கொள்கை உள்ளிட்ட பா.ஜ., திட்டங்கள் அனைத்தும் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு எதிரானவை. மோடி அரசிடம் இருந்து இந்தியாவை காக்க வேண்டும். தமிழகத்தை மீட்க வேண்டும்.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றிகொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்: 'வேலைவாய்ப்பின்மை, பெட்ரோல், டீசல், காஸ் விலை ஏற்றம் பற்றி முதல்வர் பழனிசாமி வாய் திறப்பதில்லை.
ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்ற மோடி இருக்கும் வாய்ப்புகளையும் பறிக்கிறார். தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கு தான் வெற்றி. பா.ஜ., சூழ்ச்சி செய்யும். நாம் முறியடிக்க வேண்டும்.அ.தி.மு.க., முதுகில் பா.ஜ.,வி.சி.க., தலைவர் திருமாவளவன்: தமிழகத்தில்வதந்தி, அவதுாறு பரப்பி, சதி திட்டம் தீட்டி கால் ஊன்ற சனாதன சக்திகள் முயற்சிக்கின்றன.
இவர்களை அடிக்கும் அடியில் தமிழகம் பக்கம் தலை வைத்து படுக்க கூடாது. ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்பது அவர்கள் திட்டம். பா.ஜ., தவிர இதர தேசிய கட்சிகள் இருக்க கூடாது. காங்., இல்லாத இந்தியா, கழகங்கள் இல்லாத தமிழகமே அவர்கள் கொள்கை.
தமிழகத்தில் அ.தி.மு.க., முதுகில் சவாரி செய்து தமிழகத்தில் நுழைய பார்க்கிறது. சாதி, மதம் உணர்வுகளை துாண்டி மக்களை ஈர்க்க நினைக்கிறது. தி.மு.க.,வை இத்தேர்தலில் வெல்ல முடியாது என பா.ஜ.,வுக்கு தெரியும். இத்தேர்தலில் அ.தி.மு.க.,வை அழித்து எதிர்கட்சியாக வர பா.ஜ., முயற்சிக்கிறது.
இது தெரிந்தும் பழனிசாமியும், பன்னீர் செல்வமும் அ.தி.மு.க.,வை பலி கொடுக்க போகிறார்கள். சாதிய, மத வாத அரசியல் இம்மண்ணில் வரக்கூடாது.ஸ்மார்ட் சிட்டியில் ஊழல்மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: மோடி அரசுக்கு மனசாட்சி, மனிதாபிமானம் இல்லை. டில்லி விவசாயிகள் போராட்டத்தில் 220க்கு மேல் இறந்தும் இந்த அரசுக்கு கவலை இல்லை. இவரது ஆட்சிக்கு ஆதரவாக அ.தி.மு.க., உள்ளது.
தி.மு.க., கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் முதல் சட்டசபை கூட்ட தொடரில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும். தமிழகம் வெற்றி நடை போடுகிறது என முதல்வர் பழனிசாமி கூறுகிறார். எதில் வெற்றி நடை போடுகிறது. ஊழலில் வெற்றி நடை போடுகிறது.
மதுரை ஸ்மார்ட் சிட்டியில் ரூ.15 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளனர்.கண்ணகி நீதி கேட்ட மதுரையில்ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ: கண்ணகி நீதி கேட்ட மதுரையில் நின்று தமிழகத்திற்கு நீதி கேட்கிறோம். மனசாட்சியில்லா ஆட்சி நடத்தி, மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றுகிறார் மோடி. பொது சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்த்து கார்ப்பரேட் அரசாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக முதல்வர் பழனிசாமி பா.ஜ., அடிமையாக இருக்கிறார்.
கொள்ளைக்கார அரசை இத்தேர்தலில் ஒழிக்க வேண்டும்.அதிகாரம் கைப்பற்ற வேண்டும் காங்.,மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி: பா.ஜ., கொள்கை இந்தியாவை கூறு போடுகிறது. டீசல், பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. மன்மோகன் சிங் ஆட்சியில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 108 டாலர். அன்று இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.78. இப்போது கச்சா எண்ணெய் விலை 54 டாலராக இருந்தும் பெட்ரோல் விலை ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.மன்மோகன் சிங்கிடம் மோடி பாடம் கற்க முடியவில்லை.
இது இந்தியாவிற்கு மோசமான காலம்.தேச விரோதிகள் ஆட்சி செய்கிறார்கள். இவர்களில் சுதந்திர போராட்டத்திற்காக சிறை சென்றவர்கள் யாருமில்லை. ஆங்கிலேயர்களை விட கொடுமையான ஆட்சி நடக்கிறது. இவர்களிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.மாநாட்டில் 11 தீர்மானங்கள்வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளோடு இணைந்து போராட்டத்தை தீவிரப்படுத்துதல்.
போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவித்தல். ராஜிவ் கொலையாளிகள் 7 பேரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்துதல். கல்வி கடன் ரத்து செய்யக்கோருதல், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தல், மீனவர்கள் உரிமை மீட்பு உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பா.ஜ.,வை முற்றாக முறியடிப்போம்உடல் நலம் குன்றிய நிலையில் வீல் சேரில் மேடைக்கு அழைத்து வரப்பட்ட இந்திய கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியன் பேசுகையில் ''இம்மாநாடு மூலம் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெல்லும் என பிரகடனம் செய்கிறோம். முதல்வர் பழனிசாமி பா.ஜ., அடிமையாக இருப்பதோடு தமிழகத்தையும் அடிமையாக்க பார்க்கிறார். எனவே அ.தி.மு.க.,வை வீழ்த்தி, தேர்தலில் பா.ஜ.,வை முற்றாக முறியடித்து, தமிழகத்தில் கால்பதிக்க விடமாட்டோம், என்றார்.''மதசார்பற்ற ஆட்சி அமைய தி.மு.க., கூட்டணியில் பல கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. இக்கூட்டணியை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்,'' என மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() அ.தி.மு.க-பா.ம.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் - அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை28 February, 2021, Sun 4:49 | views: 406
![]() மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நான்தான் - கமல்ஹாசன்28 February, 2021, Sun 4:46 | views: 597
![]() சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே, முதல்வர் குறித்து முடிவெடுக்கப்படும் - சரத்குமார்28 February, 2021, Sun 4:44 | views: 562
![]() தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு மே 2-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை27 February, 2021, Sat 5:28 | views: 471
![]() தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு27 February, 2021, Sat 5:25 | views: 476
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |