20 February, 2021, Sat 3:56 | views: 910
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக மின்சாரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்க கோ எலெக்ட்ரிக் என்ற பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதை மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி நேற்று டெல்லியில் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
நாட்டின் எரிபொருள் இறக்குமதி செலவு ரூ.8 லட்சம் கோடியாக உள்ளது. அதற்கு மிகப்பெரிய மாற்று எரிபொருளாக மின்சாரம் உள்ளது. வழக்கமான எரிபொருட்களுடன் ஒப்பிடுகையில், மின்சாரத்தின் செலவு குறைவு. குறைவான மாசை வெளியிடுகிறது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. எனவே, பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களை விட மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தினால், வரும் ஆண்டுகளில், எரிபொருள் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கலாம். மேலும் தூய்மையான, மாசில்லாத சுற்றுச்சூழல் அமையும்.
வேளாண் கழிவுகள் மற்றும் உயிரி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை மின்துறை அமைச்சகம் ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி1 March, 2021, Mon 5:29 | views: 306
![]() அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது1 March, 2021, Mon 5:27 | views: 298
![]() மக்களைப் பற்றி கவலை இல்லை!! தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு1 March, 2021, Mon 5:23 | views: 250
![]() அ.தி.மு.க-பா.ம.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் - அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை28 February, 2021, Sun 4:49 | views: 483
![]() மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நான்தான் - கமல்ஹாசன்28 February, 2021, Sun 4:46 | views: 707
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |