17 March, 2015, Tue 16:41 | views: 18603
புலம்பெயர் ஈழத்தமிழரான சண்முகராசா செல்வராசாவினால் நடத்தப்பட்டுவரும் ஓம்சக்தி அறக்கட்டளை நிறுவனத்தின் ஊக்குவிப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாக கிளிசொச்சி இராமநாதபுரம் மாவடிஅம்மன் சனசமூக நிலையத்திற்கு கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளுக்கான உதவிப்பொருட்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த சனசமூக கட்டடத்தொகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராமநாதபுரம் சனசமூகநிலையத்திற்கு 2 புத்தக அலுமாரிகள், பிளாஸ்ரிக் கதிரைகள், குறிஞ்சி விளையாட்டுக்கழக வீரர்களுக்காக 20 சோடி சீருடைகள் ஆகியவை ஒம்சத்தி அறக்கட்டளை நிறுவனத்தின் இணைப்பாளர் மரியசேகரன் ஆஜான்குமாரால் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த இந்த நிகழ்வில் கிராமசேவகர்கள், பாடசாலை அதிபர்கள் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த 25 வருடங்களாக செய்பட்டு வரும் வாழ்வகம் - விழிப்புல வலுவிழந்தோர் இல்லத்திற்கு ஓம் சக்தி அறக்கட்டளை சார்பில் கடந்த மாதம் அவர்களுக்கான அத்தியாவசியத் தேவைக்கான உதவிகழ் வழங்கப்பட்டது.
திரு. சண்முகம் செல்வராசா அவர்களால் பிரான்ஸில் இருந்து செயற்படுத்தி வரும் ஓம் சக்தி தொண்டு நிறுவனத்தால் கடந்த 12.03.2015 அன்று கிளிநொச்சி மாவட்டம் இராமனாதபுரம் பகுதியில் வழங்கப்பட்ட உதவிகள் .
இராமநாதபுரம் மகாவித்தியாலயம் 155 மாணவர்கள்
இராமநாதபுரம் தஃத.க பாடசாலை 100 மாணவர்கள்
இராமநாதபுரம் கல்மடு நகர் 46 மாணவர்கள்
இராமநாதபுரம் பாலர் பாடசாலை 30 மாணவர்கள்
ஆகிய பாடசாலை மாணவர்களுக்கான 400,000 ரூபாய் பெறுமதியான கல்வி உபகரணங்கள் 12.03.2015ல் ஓம் சக்தி தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.
இன்னிகழ்வை சிறப்பிக்க அரசபணியாளரும் சமூக செயல்பாட்டாளருமான திரு வரதீஸ்வரன் மனித உரிமை இல்லத்தின் மன்னார் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு கோகுலன் ஷானு உதவி நிதியத்தின் இணைப்பாளர் திரு உதயச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் ஆகியோருடன் பாடசரலை அதிபர்கள் ஆசிரியர்கள் மததலைவர்கள் சமூகசெயல்பாட்டாளர்கள் பொதுமக்கள் மாணவர்கள் என பலரும் பெருமளவில் வருகைதந்திருந்தனர்
பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்திய ஒலியுடன் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு பின்னர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வை ஆரம்பிக்க சிறுமி ஷானுக்காவினால் ஷானு உதவி நிதியத்தின் திரை நீக்கப்பட்டு ஷானு உதவி நிதியம் ஆரம்பிக்கப்பட்டது.
அதிபர் சிறப்பு விருந்தினர் மற்றும் பாடகாலை மாணவர்களின் சிறப்புரையை தொடர்ந்து மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வளங்கப்பட்டு பின் பல்கலைகழக மாணவர் இருவருக்கு கற்றலுக்கான நிதி உதவியும் வழங்கப்பட்டது. அடுத்து அதிபர்கள் ஆசிரியர்கள் சமூக செயல்பாட்ளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஓன்றையும் ஷானு உதவி நிதியத்தின் உறுப்பினர்கள் ஏற்பாடுசெய்து இன்நிகழ்வு பற்றியும் ஏனைய விடையங்கள்பற்றியும் கலந்துரையாடி இனிதே நிகழ்வை நிறைவு செய்தனர்.
ஷானு உதவி நிதியம் சமூக செயல்ப்பாட்டாளர்களை உள்வாங்கி தொண்டர் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாக அலகுகளினுடாக சமூகத்தின் தேவைகளை கண்டறிந்து ஆய்வுசெய்து திட்டமிடல் ஊடாகா வெளிப்படையானதும் ஆற்றல்மிக்கதும் நீண்டகால பயன்பாடுள்ளதுமான செயல்திட்டங்களை நோக்கி முன்னேறும். சமூக ஏற்றதாழ்வுகள் கடந்து அரசியல்சாராத மனிதநேயஅடிப்படையில் முன்நிபந்தனைகளுக்கு உட்படாது செயலாற்ற முன்வரும் அனைவருடனும் கைகோத்து செயலாற்றும்.
அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() வவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்!!17 March, 2015, Tue 14:58 | views: 16710
![]() திருகோணமலையில் ???நாங்கள்??? இயக்கத்தின் மக்கள் நலப்பணி!17 March, 2015, Tue 14:48 | views: 16701
|
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |