முதலில் பெயரின் முதல் எழுத்தாக A அமைந்தால் அவர்களது இயல்புகள் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.
Aஆங்கிலத்தின் முதலெழுத்து. இதைப் பெயரின் முதலெழுத்தாகக் கொண்டவர்கள் அற்புத சக்தி படைத்தவர்களாயிருப்பர். A எழுத்தில் சூரியக் கதிர்கள் எப்போதும் குவிக்கப்படுவதால், இந்த எழுத்தில் பெயர் துவங்குவோர் எப்பொழுதும் பிரகாசித்துக்கொண்டே இருப்பர்.
இவர்கள் மக்களால் மிகவும் நேசிக்கப்படுவர். தாங்கள் சொன்னதுதான் வேதம் என்பர். அரசியல், ஆன்மீகம், மருத்துவம் ஆகியவை இவர்களுக்கு அத்துப்படி. இவர்கள் பேசுவதைப் பிறர் வாய் பிளந்தபடி கேட்டுக்கொண்டிருப்பர்.
உஷ்ண உடம்புக்காரர்கள். அடிக்கடி கண் எரிச்சல் ஏற்படும். உடம்பு ஒல்லியாக இருக்கும். இனக்கவர்ச்சியில் அதிக ஈடுபாடு இருந்தாலும் மாற்று இனத்தவரிடம் மரியாதையாக நடந்து கொள்வர். இவர்களுக்கு வாய்க்கும் துணைவி அல்லது துணைவர் கிழக்குப் பார்த்த வீட்டில் குடியிருந்தால் நன்மையாக அமையும்.
வார்த்தைகள் அதிகாரத் தோரணையில் இருக்கும். அடங்கிப் போகமாட்டார்கள். ஏற்கும் எந்தப் பதவியிலும் சுதந்திரத்தை விரும்புவர். அடிமை வேலை செய்ய மாட்டார்கள்.
ஏற்றுக்கொண்ட பதவியில் கவனம் செலுத்தி நற்பெயர் பெறுவர். படிப்பிலும் கெட்டிக்காரர். இவர்கள் வாழ்வில் வேகமாக உயர்வடைவார்கள். திடமான எண்ணம் கொண்டவர்கள்.
எதிலும் வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டிருப்பர். தோல்விகளை எப்படி வெற்றியாக்குவது என்பதை இவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆக்கபூர்வமானவர்கள்.
இரவுப்பொழுது இவர்களுக்குப் பிடிப்பதில்லை. தன்னை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்வதை விரும்புவர். ஒளிவு மறைவு கபடு சூது அற்றவர்கள்.
நேர்மையாளர்களான இவர்களுக்கு நாணயமான நண்பர்கள் அனேகம். நிர்வாகத்திறன் அதிகம். நாட்டுநலனில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ளும் இவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பார்கள்.நிர்வாகத்திறன், அறிவு, சுதந்திர உணர்வு, சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபாடு ஆகிய குணநலன்கள் நிரம்பப் பெற்றவர்கள். மொத்தத்தில் மிக மிக அதிர்ஷ்டசாலிகள்.
சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செய்தால் அதள பாதாளத்திற்குப் போய்விடுவார்கள். |