Paristamil Navigation Paristamil advert login

துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான புதிய படத்தின் போஸ்டர்

துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான புதிய படத்தின் போஸ்டர்

28 ஆடி 2023 வெள்ளி 15:37 | பார்வைகள் : 4895


நடிகர் துல்கர் சல்மான் இன்று தனது 40 பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனைமுன்னிட்டு, அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலுடன் கூடிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ‘வாத்தி’ பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்திற்கு ”லக்கி பாஸ்கர்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான் தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். வரும் நாட்களில், இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. தனுஷ் நடித்த வாத்தி படத்தின் மூலம், வெங்கி அட்லூரி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தார். அந்த படத்தின் வெற்றியை தனது புதிய படத்திலும் வெற்றியை கொடுப்பார் என எதிர்பார்க்காடுகிறது.

படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த  படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகியவற்றின் கீழ் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தின் எடிட்டராக நவீன் நூலி உறுதிபடுத்தப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், “கிங் ஆஃப் கோதா” படத்தில் நடித்துள்ளார், இந்த படத்தை இயக்குனராக அறிமுகமாக இருக்கும் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான், நடன ரோஜா, பிரசன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன், சாந்தி கிருஷ்ணா, வட சென்னை சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்