காதல்
1 மாசி 2024 வியாழன் 08:23 | பார்வைகள் : 2470
நேற்று மாலையே!
முடித்து வைத்த!
வீட்டுப்பாடங்களை!
சுக்குநூறாய் கிழித்தெரிந்துவிட்டு!
வகுப்பறைவிட்டு வெளியேறுகிறேன்!
ஏற்கனவே வெளியேறிவிட்ட!
உன்னை!
தனிமையில் சந்திப்பதற்காக...!
எனக்கு மிகவும் பரிச்சயமான!
கல்லூரியில்,!
அதிகம் பரிச்சயமில்லாத!
உன்னுடன் பகிர்ந்துகொள்ள,!
மிகவும் பரிச்சயமான!
என் தாய்மொழியிலோர்!
கவிதை கிட்டாவிட்டாலும்!
குறைந்தபட்சம்!
நான்கைந்து வார்த்தைகளாவது!
கிட்டியிருக்கலாம்...!
தயங்கி வேர்த்தோதுங்கிய!
சில மணித்துளிகளில்!
உன்னைச்சூழ்ந்துகொண்ட!
தோழிகளுடன் நீ!
கதைபல கதைப்பதைப்பார்த்து!
சற்றே தள்ளி நின்று!
நடத்திக்கொண்டிருந்தேன்!
மனதிற்க்குள் ஓர் விவாதம்!
'ரோஜாப்பூவுக்குப் பேச!
யார் கற்றுக்கொடுத்தது'