தளபதி 68-இல் விஜய்யுடன் இணைகின்றாரா அஜித்…?
9 ஆவணி 2023 புதன் 14:56 | பார்வைகள் : 5143
’தளபதி 68’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார் என்பது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் அல்லது நவம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக வெங்கட் பிரபு செய்து வரும் நிலையில் வெங்கட்பிரபுவின் தந்தை கங்கை அமரன் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது ’தளபதி 68’ படம் குறித்த ஒரு பெரிய செய்தியை என்னிடம் வெங்கட் பிரபு கூறினார். அதை கேட்டு நான் ஷாக் ஆயிட்டேன். இதை என்னால் தற்போது வெளியில் சொல்ல முடியாது.
ஆனால் தளபதி விஜய் இந்த படத்தின் கதையை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். கண்டிப்பாக இந்த படம் ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த படத்தில் மூன்று அல்லது நான்கு பாடல்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த படத்தில் இடம்பெறும் நட்சத்திரங்கள் கண்டிப்பாக அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.