மகிழுந்து மின்னேற்றி நிலையங்களில் வங்கி அட்டைகளை பயன்படுத்த முடியும்!!
13 சித்திரை 2024 சனி 17:03 | பார்வைகள் : 5144
இலத்திரனியல் மகிழுந்துகளை மின்னேற்றும் நிலையங்களில், வங்கி அட்டைகளை (carte bancaire) பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஏப்ரல் 13 ஆம் திகதியில் இருந்து 50 kW இற்கு மேல் மின்னேற்றக்கூடிய நிலையங்களில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தக்கூடிய வசதி கட்டாயமாக கொண்டுவர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தலைநகர் பரிஸ் மற்றும் இல் து பிரான்ஸ் உள்ளிட்ட சில பெரு நகரங்களில் என மொத்தமாக 18,000 நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இலத்திரனியல் பண பரிவர்த்தனை சேவைகள் (terminal de paiement électronique) கட்டாயமாக நிறுவப்பட வேண்டும் என கடந்த 2022 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தற்போது வங்கி அட்டைகள் அல்லது கடன் அட்டைகள் மூலம் பணம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.