Paristamil Navigation Paristamil advert login

நம் உடலில் அதிக துர்நாற்றம் கொண்ட பகுதி எது தெரியுமா..?

நம் உடலில் அதிக துர்நாற்றம் கொண்ட பகுதி எது தெரியுமா..?

29 பங்குனி 2024 வெள்ளி 10:53 | பார்வைகள் : 1148


நம் உடலை தினசரி சுத்தம் செய்யாவிட்டால், பாக்டீரியாக்கள் சேர்ந்து அழுக்காக மாறி துர்நாற்றம் வரும். இதனால் தான் நாம் தினமும் குளித்து சுத்தமாகிறோம். மேலும் நம் உடலில் உள்ள துர்நாற்றங்களை போக்க தான் சோப்பு, ஷாம்பு என அனைத்தையும் பயன்படுத்துகிறோம்

ஆனால் அப்படி சோப்பு போட்டு குளித்தும் சில பகுதிகளில் அழுக்கு தேங்குகிறது. அது என்ன பகுதி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உடல் முழுவதும் சோப்பு போட்டு தேய்த்து குளித்தாலும், நாம் இந்த இடத்தை மட்டும் தேய்த்து குளிக்க மறந்துவிடுகிறோம். இதனால் அந்த பகுதியில் பாக்டீயாக்கள் வளர்ந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அது வயிற்றின் தொப்புள் பகுதி தான்.

தொப்புள் உண்மையில் ஒரு காயம் என அறிவியல் சொல்கிறது. தாயிடம் இருந்து குழந்தை பிரிக்கப்படுவதால் ஏற்படும் காயம் தான் இந்த தொப்புள். சிலருக்கு இந்த தொப்புள் குளியகாவும், சிலருக்கு வெளியில் வந்துஇருக்கும். அது அந்த காயம் ஆறும் போது எப்படி இருக்கிறதோ அப்படிதான் மாறுகிறது.

2012 இல் PLOS One இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, தொப்புளில் 2,368 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடலில் மிகவும் அழுக்கான பகுதியாக தொப்புள் கருதப்படுகிறது.

இந்த இடத்தில் அதிக வியர்வை சுரக்கும். ஆனால் குழியாக இருப்பதால் நாம் யாரும் விரலை விட்டு தொப்புளை சுத்தம் செய்வதில்லை. இதனால் பாக்டீரியாக்கள் தேங்கி தேங்கி அழுக்காகவும், துர்நாற்றம் உள்ள பகுதியாகவும் மாறுகிறது.

தொப்புளில் அரிப்பு ஏற்பட்டாலோ, சிவந்து காணப்பட்டாலோ அதற்கு இந்த பாக்டீரியாக்கள் தான் காரணம். அது பெரியளவில் பிரச்சனை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்