தேங்காய்களை அதிகம் விரயம் செய்யும் நாடுகளில் முதலிடத்தில் இலங்கை

2 சித்திரை 2024 செவ்வாய் 06:23 | பார்வைகள் : 6015
உலகில் தேங்காய்களை அதிகம் விரயம் செய்யும் நாடுகளில் இலங்கை முதலிடத்தை வகிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தெற்கு தெங்கு பயிற்சி நிலையத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தேங்காய் நுகர்வுக்கான பாவனையில் ஏற்படும் விரயத்தை குறைப்பது தொடர்பான புதிய தொழில்நுட்ப அறிவை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தென்னை பயிர்ச்செய்கை சபை மற்றும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.