Paristamil Navigation Paristamil advert login

■ போக்குவரத்து தடை - முழுமையான தகவல்கள்.,..!

■ போக்குவரத்து தடை - முழுமையான தகவல்கள்.,..!

20 வைகாசி 2024 திங்கள் 06:00 | பார்வைகள் : 6424


நாளை மே 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இல் து பிரான்சுக்குள் பல்வேறு தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட உள்ளன.

 

● RER

RER A : இரண்டில் ஒன்று இயங்கும்.

RER B : இரண்டில் ஒன்று இயங்கும்.

RER C : ஐந்தில் இரண்டு இயங்கும். (நெருக்கடியான நேரத்தில் மட்டும் ஒவ்வொரு 15 தொடக்கம் 30 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் ஒரு தொடருந்து இயங்கும்)

Paris Austerlitz இல் இருந்து Invalides வரை தொடருந்து இயக்கப்படாது.

RER D : ஐந்தில் ஒரு சேவை மாத்திரம் இயங்கும். Gare de Lyon - Châtelet-les-Halles  நிலையங்களுக்கிடையில் உள்ளக இணைப்பு (L'interconnexion ) தடைப்படும்.

RER E : நெருக்கடியான நேரத்தில் மட்டும் ஐந்தில் இரண்டு சேவை இயக்கப்படும். காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிவரை தொடருந்து சேவைகள் முற்றாக தடைப்படும்.

 

***

● Transilians

Ligne H : மூன்றில் ஒன்று.

Ligne J : மூன்றில் ஒன்று.

Ligne L : மூன்றில் ஒன்று.

Ligne N : மூன்றில் ஒன்று.

Ligne P : இரண்டில் ஒன்று. 

ஆகிய சேவைகள் இயங்கும்.

Ligne R : நெருக்கடியான நேரத்தில் மட்டும் ஐந்தில் ஒரு தொடருந்து இயக்கப்படும்.

Ligne U : மூன்றில் ஒன்று.

Ligne V : ஒருமணிநேரத்துக்கு ஒரு தொடருந்து இயக்கப்படும். 

**

 

● Trams

T4 : ஒவ்வொரு 15 நிமிடத்துக்கு ஒரு ட்ராம் Aulnay-Sous-Bois மற்றும் Bondy இடையே இயக்கப்படும். Gargan இல் இருந்து Montfermeil  (மருத்துவமனை தரிப்பிடம்) வரை ட்ராம் இயக்கப்படாது.

T11 : ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருதடவை ட்ராம் இயக்கப்படும். 

T12 : வழமை போல் இயங்கும்.

T13 : வழமை போல் இயங்கும்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்