'இந்தியன் 2' படத்தின் மாஸ் அப்டேட்..!
20 வைகாசி 2024 திங்கள் 15:43 | பார்வைகள் : 2443
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2 ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதி தாமதம் ஆகலாம் என்று செய்தி வெளியாகியது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் ’இந்தியன் 2’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதோடு இன்னொரு மாஸ் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று ஷங்கர் அறிவித்த நிலையில் நாளை மறுநாள் அதாவது மே 22ஆம் தேதி இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். நாளை மறுநாள் சிங்கிள் பாடல் வெளியாகும் என்ற ட்விஸ்டை ஷங்கர் அறிவித்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனிருத் கம்போஸ் செய்த அந்த பாடலைக் கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடல் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.