Paristamil Navigation Paristamil advert login

கானாவில் அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான் 'வாட்டர் பாட்டில்' பாடல் எப்படி இருக்கு..

கானாவில் அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான் 'வாட்டர் பாட்டில்' பாடல் எப்படி இருக்கு..

24 வைகாசி 2024 வெள்ளி 14:05 | பார்வைகள் : 697


தனுஷ் நடித்த இயக்கிய ‘ராயன்’ என்ற திரைப்படம் அவரது 50வது படம் என்ற பெருமையை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஜூன் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்றுமுன் அந்த பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக ஏ ஆர் ரஹ்மான் இசை என்றாலே துள்ளலாக இருக்கும் என்ற நிலையில் முதல் முறையாக அவர் கானா பாடலை கம்போஸ் செய்த நிலையில் இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது ஆச்சரியப்படத்தக்க வகையில் இருப்பதாகவும் இப்படி ஒரு பாடலை ஏ ஆர் ரகுமானிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கானா பாடல் பாடுவதில் ஸ்பெஷலான சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இந்த பாடலை பாடியுள்ள நிலையில் இருவரது துள்ளலான குரலில் பாடல் அசத்தலாக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. எனவே இந்த பாடல் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெரும் என்று கூறப்பட்டு வருகிறது.

30 ஆண்டுகளுக்கு மேலாக இசை புயல் கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்து வரும் நிலையில் அவரது இந்த பாடலும் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த பாடலை கானா காதர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ள இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்