கார்த்தி பிறந்த நாளில் ஒரு சூப்பர் அப்டேட்..!
25 வைகாசி 2024 சனி 09:18 | பார்வைகள் : 1891
நடிகர் கார்த்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கார்த்தியின் பிறந்தநாள் வாழ்த்து குறித்த ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவர் நடித்து வரும் 27-வது படத்தின் அப்டேட் வெளியானது என்பதும் ’மெய்யழகன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார் என்பதையும் பார்ப்போம். ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கார்த்தியுடன் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர் என்பதும் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் நேற்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கார்த்தி 27 ’ படத்தின் இரண்டு அப்டேட்டுகள் வெளியான நிலையில் இன்று அவர் நடித்து வரும் 26வது படத்தின் அப்டேட் மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’கார்த்தி 26’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ‘வா வாத்தியாரே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து கார்த்தி படங்களின் அப்டேட்டுகள் வந்து கொண்டிருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.