நடிகர் பாலகிருஷ்ணா சினிமாவில் இருந்து ஓய்வா?
25 வைகாசி 2024 சனி 09:21 | பார்வைகள் : 1968
நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள திரைப்படம் ‘சத்யபாமா‘. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார். அவர் கடந்த 50 நாட்களாக சினிமா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
ஆந்திராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. இதில், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள இந்துபுரம் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) வேட்பாளராக ஏப்ரல் 19-ம் தேதி சிட்டிங் எம்எல்ஏவான நடிகர் பாலகிருஷ்ணா வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆந்திராவில் 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெற்றது. இதனால் நடிகர் பாலகிருஷ்ணா படவேலைகளில் ஈடுபடுபவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அவர் எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை. இதனால் அவர் தீவிர அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் நடிகர் பாலகிருஷ்ணா, 'சத்யாபாமா' பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது," கடந்த 50 நாட்களாக கேமராவை நான் எதிர் கொள்ளவில்லை. 'என்பிகே 109' படத்தின் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. தேர்தல் முடிந்துவிடவில்லை. இன்னும் முடிவுகள் வர வேண்டும்" என்று அவர் கூறினார். தேர்தல் முடிவு வந்த பிறகே பாலகிருஷ்ணா சினிமாவில் நடிப்பாரா என்பது தெரிய வரும் என்று அவரது ரசிகர்கள் கூறியுள்ளனர்.